Monday, August 14, 2017

சிறையில் இருந்து சசிகலா கண்ணீர் கடிதம்
'அ.தி.மு.க., என்ற இரும்புக்கோட்டையில், விரிசல் விழுந்து விடக்கூடாது. முன்பை விட, உறுதியாக செயல்பட்டு கட்சியையும், தமிழகத் தையும் காக்க வேண்டும்' என, சிறையில் இருந்தபடி, முன்னாள் முதல்வர், ஜெ.,யின் தோழி சசிகலா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.





பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா,

தொண்டர்களுக்கு எழுதியுள்ள, கண்ணீர் கடிதம்: ஜெயலலிதா நம்மோடு இருந்தால், நாம் எவ்வாறு உணர்வோமோ, அந்த உணர்வோடு தொண்டர்கள் கட்சியில், தாயின் பரிவை, பாதுகாப்பைதொடர்ந்து இனியும் உணரலாம்.

நம் கண் முன், ஜெ., காட்டிய லட்சிய பாதை, விரிந்து கிடக்கிறது. அதில், அ.தி.மு.க., என்ற, இந்த கட்சியின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும். இந்தியாவின், மூன்றாவது பெரிய கட்சி, அ.தி.மு.க., என்ற நிலையில் இருந்து சிறிதும் இறங்கக்கூடாது. 'இரும்பு கோட்டையில் விரிசல்விழுந்து விடாதா; தடி ஊன்றியாவது எழுந்து நிற்க முடியுமா...' என, எதிரிகள் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

முன்பை விட உறுதியாக, கட்சியையும், தமிழகத்தையும் காக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்டுள்ள இடைவெளியை,

எதிரிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஆண்டு முழுவதும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் நுாற்றாண்டு விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024