திருமங்கலம்- - ராஜபாளையம் நான்குவழிச்சாலைக்கு மூன்று வழிகள் ஆய்வு: ராஜபாளையம் எம்.எல்.ஏ., தகவல்
பதிவு செய்த நாள்13ஆக
2017
23:46
ராஜபாளையம்:திருமங்கலம்- ராஜபாளையம் நான்குவழிச்சாலை பணிக்கு மூன்று வழிகள் ஆய்வு செய்யப்படுவதாக தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; ராஜபாளையத்தில் பை-பாஸ் ரோடு அமைக்க 2010ல் மாநில அரசு அனுமதி அளித்து நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை இணைந்து செய்தன.
இப்பணியை விரைவுபடுத்தவும், திருமங்கலத்திலிருந்து ராஜபாளையத்திற்கு நான்கு வழிச்சாலை வசதி கோரியும் தேசிய நெடுஞ்சாலை முதன்மை பொதுமேலாளர் சின்னாரெட்டியிடம் மனு கொடுத்தேன். இதனையடுத்து மத்திய அரசு அனுமதி அளித்து பிப்ரவரியில் விரிவான திட்டத்திற்கான டெண்டர் தயாரிக்க ஆய்வுப் பணிக்காக மூன்றுகோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இந்த ஆய்வில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு மூன்று வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொதுமேலாளர் நாக்வியை சந்தித்து, 'திருமங்கலத்திலிருந்து குற்றாலம், சபரிமலை கோயில், திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு ராஜபாளையம் வழியாக போக்குவரத்து உள்ளது.
இதனால் ராஜபாளையத்தில் கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்கும் விதமாக திருமங்கலத்திலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லையான சொக்கநாதன் புத்துார் விலக்கு வரை நான்குவழிச்சாலை பணியை முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரினேன், அதற்கு அவர் உறுதி அளித்தார்' என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment