'பார்சல் வாங்கினாலும் வரியிலிருந்து தப்ப முடியாது'
பதிவு செய்த நாள்14ஆக
2017
04:01
புதுடில்லி: 'ஏசி ஓட்டல்களில் இருந்து, வீடுகளுக்கு வாங்கி செல்லும், 'பார்சல்' உணவுக்கும், 18 சதவீத, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும், ஒரே வரி என்ற திட்டத்தின் கீழ், ஜி.எஸ்.டி., ஜூலை, 1ல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவு விடுதிகளில் சாப்பிட, 28 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.
'ஏசி' எனப்படும் குளிர்சாதன வசதி உடைய, ஓட்டல்கள், மற்றும் மதுபான விடுதிகளுக்கு, 18 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. 'ஏசி' வசதி இல்லாத
ஓட்டல்களுக்கு, 12 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது.எனினும், 'சில ஏசி ஓட்டல்களில், ஒரு தளத்தில் ஏசி பயன்பாடு இல்லை' என கூறி, 12 சதவீதம் மட்டுமே வரி வசூலிக்கப்படுவதை ஏற்க முடியாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.
இது குறித்து நேரடி வரிகள் வாரியம் கூறியதாவது:
ஏசி ஓட்டல்களில், ஒரு பகுதியில் மட்டும் ஏசி வசதி இல்லை என கூறி, 18 சதவீதத்திற்கு பதில், 12 சதவீத வரி வசூலிப்பதை ஏற்க முடியாது. அங்கிருந்து, 'பார்சல்' உணவு வாங்கி சென்றாலும், அதற்கும், 18 சதவீத வரி கட்டாயம் வசூலிக்க வேண்டும். ஓட்டலில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஏசி வசதி இருந்தாலும், அங்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளது.
No comments:
Post a Comment