சாலையோரம் கரடிகள் 'வாக்கிங்' : சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
பதிவு செய்த நாள்14ஆக
2017
00:02
கூடலுார்: 'முதுமலை, சாலையோரங்களில் சுதந்திரமாக உலா வரும், கரடிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் அருகில், சாலையோரங்களில் வன விலங்கினங்கள் உலா வருகின்றன.நேற்று முன்தினம், சாலையோரம், இரண்டு கரடிகள் உலா வந்தன. சுற்றுலா பயணியர், அவற்றின் அருகே வாகனங்களை நிறுத்தி, இடையூறு ஏற்படுத்தினர். அங்கு வந்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை கூறி, அனுப்பினர்.
வனத்துறையினர் கூறியதாவது:காலை, மாலை நேரங்களில், சாலையோரம் வன விலங்குகள் வருகின்றன. வாகனங்களை நிறுத்தி, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், யானை, காட்டெருமை போன்றவை, சுற்றுலா பயணியரை தாக்கும் அபாயம் உள்ளது.
விலங்குகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில், ஈடுபடுவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment