Saturday, August 19, 2017

வீடு வீடாக அளந்து அபராதம் விதிக்கும் திட்டம் 'வேட்டை' ஆரம்பம்! மாநகராட்சிக்கு எதிராக மக்களிடம் கடும் எதிர்ப்பு!
பதிவு செய்த நாள்
ஆக 18,2017 23:49



அனுமதியற்ற கூடுதல் கட்டடங்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்துக்கு மக்களிடம் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.ஆண்டுக்கு ஆயிரத்து 72 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடும் கோவை மாநகராட்சிக்கு, எந்த புதிய திட்டத்தையும் நிறைவேற்ற நிதி இல்லை. அதனால், தமிழ்நாடு நகர உள்கட்டமைப்பு நிதி சேவை குழுமம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களிடம் கடன் பெறுவதற்கு, மாநகராட்சி முயற்சித்து வருகிறது. அவ்வாறு கடன் பெறுவதற்கு, திருப்பிச்செலுத்துவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை, காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், 2008லிருந்து, சொத்து வரி மாற்றப்படவில்லை. கவுன்சில் அல்லது அரசு அனுமதியின்றி சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண விகிதங்களை மாற்றி அமைக்க முடியாது. அதனால், அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, மறுஅளவீடு செய்து, வரி விதிப்பை மாற்றியமைக்க, 182 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. கூடுதல் கட்டுமானம் இருந்தால், அதற்கான வரித்தொகையை, அபராதமாக, 13 அரையாண்டுக்கு செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடங்களை அளவீடு செய்ய வருவோர், வசூல் வேட்டை நடத்தவே, இத்தகைய திட்டம் பயனுள்ளதாக இருக்குமென்று அஞ்சுகின்றனர். வீடு கட்ட அனுமதி கோரும்போதும்கட்றாங்க...'கட்டிங்' வெட்றாங்க!
கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அனுமதியின்றி கட்டிடம் கட்டுவதால், நகர ஊரமைப்புத் துறைக்குச் செலுத்தும் 'கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணம்' செலுத்துவதில்லை.முழுமையாக சொத்து வரியும் விதிக்கப்படுவதில்லை. இவர்களிடம் 'கட்டிங்' வாங்கிக் கொண்டு, பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, மாநகராட்சி மீது வழக்குப் போடுவதற்கே, அதிகாரிகளே 'ஐடியா' கொடுத்து விடுகின்றனர். இந்த வழக்குகளையும் முறையாக ப்படுவதில்லை.இத்தகைய வழக்கு செலவுக்கே, மாநகராட்சி பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஒரு வழக்கில் கூட, மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டு, வரி வசூலித்ததாக தகவல் இல்லை.இதேபோல், ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 'பல்க்' இணைப்பு என்ற பெயரில் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது, மாநகராட்சி. முறையாக கட்டணம் வசூலிப்பதில்லை. இவற்றை சரி செய்தாலே, மக்களிடம் பணம் பறிக்கத்தேவையில்லை.-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024