Saturday, August 5, 2017

சென்டாக் பிடிஎஸ் பாடப் பிரிவுக்கு ஆகஸ்ட் 6-இல் முதல்கட்ட கலந்தாய்வு

By புதுச்சேரி,  |   Published on : 04th August 2017 08:24 AM  |   
புதுச்சேரி சென்டாக் பல் மருத்துவ (பிடிஎஸ் ) பாடப் பிரிவுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
பல் மருத்துவப் பாடப் பிரிவில் உள்ள 129 இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு புதுவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, காலை 9 மணிக்கு தியாகிகளின் பிள்ளைகளுக்கும், 9.15 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கும், 9.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும், 9.45 மணிக்கு விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு நீட் தேர்வில் 567 முதல் 240 வரையும், 11 மணிக்கு 239 முதல் 201 வரையும், மதியம் 12 மணிக்கு 200 முதல் 175 வரையும், 2 மணிக்கு 174 முதல் 158 வரையும் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 704 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
அதன்படி, மாலை 3 மணிக்கு நீட் தேர்வில் 656 முதல் 489 வரையும், 4 மணிக்கு 488 முதல் 454 வரையும் மதிப்பெண்கள் பெற்ற 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதள முகவரி www.centaconline.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண்கள் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல், நகல் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நாள் நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் ரூ. 350-க்கும், இதர பிரிவினர் ரூ. 750-க்கும் வரைவோலையை பட்ங் இர்ய்ஸ்ங்ய்ர்ழ், இஉசபஅஇ என்ற பெயரில் புதுச்சேரியில் செலுத்தத் தக்க வகையில் கொண்டு வரவேண்டும்.
மேலும், கலந்தாய்வுக் கட்டணத்தை மாணவர்கள் ரொக்கமாகவும் செலுத்தலாம். விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் இடங்கள்: மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி: பொது - 15, ஓபிசி - 3, எம்பிசி - 5, எஸ்சி - 5, பிசிஎம் - 1.
மாகே பல் மருத்துவக் கல்லூரி: பொது - 25, ஓபிசி - 6, எம்பிசி - 9, எஸ்சி - 8, பிசிஎம் - 1, ஈபிசி - 1.
வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி: பொது - 25, ஓபிசி - 5, எம்பிசி - 9, எஸ்சி - 8, பிசிஎம் - 1, இபிசி - 1, பிடி -1.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024