பி.இ.: பிற மாநில மாணவர்கள் 36 பேர் சேர்க்கை
By DIN | Published on : 05th August 2017 02:27 AM |
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூலை 17 இல் தொடங்கிய இந்த சேர்க்கை ஆகஸ்ட் 11-இல் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், பிற மாநில மாணவர்களை தமிழக கல்லூரிகளில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவர்களுக்கென 100 பி.இ. இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இவர்களுக்கென 100 பி.இ. இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் 52 பேர் சேர்க்கைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 36 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
No comments:
Post a Comment