Thursday, August 10, 2017

80 நாட்டினர் கத்தாருக்கு விசா இல்லாமல் செல்லலாம்

பதிவு செய்த நாள்  09ஆக
2017
22:37




துபாய்:விசா இல்லாமல் 80 நாடுகளை சேர்ந்தவர்கள் கர்த்தாருக்குள் அனுமதிக்கப்படுவார்கள், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளன.கத்தாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்தனர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கத்தாருக்கு வர இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகை தரும் பயணிகளின் நாட்டைப் பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறை 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை மாறுபடுகிறது.

கத்தார் சுற்றுலாத்துறை தலைவர் ஹாசன் அல் இப்ராஹிம் கூறுகையில், “80 நாடுகளை சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள். கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகி உள்ளது. எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறிஉள்ளார்.

கடந்த நவம்பர் 2016ல் கத்தார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரங்களில் இருந்து 96 மணி நேரங்கள் (நான்கு நாட்கள்) டிரான்சிட் விசாவில் கத்தாரில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் கத்தார் ஏர்வேஸ் தோகாவில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை அறிவித்தது. இப்போது விசா தொடர்பான முடிவு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி செயல்பாட்டிற் வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024