Saturday, August 12, 2017


இன்ஜினியரிங் கவுன்சிலிங் நிறைவு : 89 ஆயிரம் இடங்களுக்கு ஆளில்லை

பதிவு செய்த நாள்12ஆக
2017
05:11

சென்னை: அண்ணா பல்கலை யின் இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இதில், 86 ஆயிரத்து, 355 இடங்கள் நிரம்பியுள்ளன; 89 ஆயிரத்து, 101 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டை விட, 3,414 மாணவர்கள் குறைவாகவே, இன்ஜி., படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 533 இன்ஜி., கல்
லுாரிகளில், 1.80 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 17ல் கவுன்சிலிங் துவங்கியது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு, தொழிற்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலிங் முடிந்தது. பின், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23ல் பொது கவுன்சிலிங் துவங்கியது; 20 நாட்கள் நடந்த கவுன்சிலிங், நேற்று முடிந்தது. 

கவுன்சிலிங்கிற்கு, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 552 பேர் அழைக்கப்பட்டனர்; 48 ஆயிரத்து, 583 பேர் வரவில்லை. 

இறுதியில், 86 ஆயிரத்து, 355 பேர் இடங்கள்   பெற்றனர்; 89 ஆயிரத்து, 101 இடங்கள் காலியாக உள்ளன.

மெக்கானிக்கலில் 19 ஆயிரத்து, 601 பேர் சேர்ந்துள்ளனர்; எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், 16 ஆயிரத்து, 60; கம்ப்யூ., சயின்ஸ், 14 ஆயிரத்து, 769; எலக்ட்ரிக்கல், 10 ஆயிரத்து, 106; சிவில், 8,199 மற்றும் ஐ.டி., பிரிவில், 5,532 பேர் சேர்ந்து உள்ளனர்.

மீதமுள்ள இடங்களுக்கு, வரும், 17ல், துணை கவுன்சிலிங் நடக்கிறது. இதற்கு, 16ம் தேதி நேரில் சான்றிதழ்களுடன் சென்று, பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களை, www.tnea.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024