Saturday, August 12, 2017

ஏ.டி.எம்.,-களில் ரூ.500, 100 மட்டுமே கிடைக்கும்
பதிவு செய்த நாள்12ஆக
2017
04:56

மதுரை; வங்கி விடுமுறை நாட்களில், பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க, ஏ.டி.எம்.,களில் 500, 100 ரூபாய்களை மட்டுமேவைக்க, ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

தேசிய, தனியார், கூட்டுறவு வங்கிகள் சார்பில் தமிழகத்தில் 21 ஆயிரம் ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இரண்டாவது சனி, கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினவிழா காரணமாக ஆக., 12 முதல் 15 வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுகிறது. இந்நாட்களில், ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தேசிய வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏ.டி.எம்.,களில் தட்டுப்பாடின்றி பணம் கிடைக்க 500, 100 ரூபாய் வைக்கப்படும். ஒரு ஏ.டி.எம்.,ல் அதிகபட்சமாக 20 லட்ச ரூபாய் வரை வைக்கலாம். ஏ.டி.எம்.,களுக்கு பணம் எடுத்து செல்ல, ஆக.,14ல் பணபெட்டகத்தை திறந்து வைக்க, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் அன்றாட செலவிற்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' மற்றும் கிரடிட், டெபிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை நடப்பதால், வங்கி விடுமுறை நாட்களில் பெரிய பாதிப்பு இருக்காது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024