Thursday, August 10, 2017

தலையங்கம்

திறமையின் அடிப்படையில் கேள்விகள்


தமிழ்நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக என்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வரிசையில் சேர்ந்து விடுகிறார்கள்.

ஆகஸ்ட் 10 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக என்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்கள் வரிசையில் சேர்ந்து விடுகிறார்கள். தமிழக அரசு பணிகளுக்கான அனைத்து தேர்வு களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத்தான் நடந்து வருகிறது. ஒவ்வொரு வேலைதேடும் இளைஞரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தில் எப்போது அரசு பணிக்காக தேர்வு நடத்துவார்கள்? அதற்கான விளம்பரம் எப்போது வரும்? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்கும் விளம்பரம் வரும்போது எத்தனை இடங்கள் காலியாக இருக்கிறதோ, அதைவிட பல நூறு மடங்கு விண்ணப்பதாரர்கள் களத்தில் இறங்குவார்கள். அந்த வகையில், தமிழக அரசு அனைத்து துறைகளிலும் உதவி யாளர்களாக பணிபுரிவதற்கான குரூப்–2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது.

பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பதவிகள், தலைமைச் செயலகம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சர் பதவி உள்பட ஏராளமான துறைகளில் உதவியாளர் பணிக்காக ஆயிரத்து 953 பணி இடங்களுக்கு, 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த பணிகளுக்கு பட்டப்படிப்புதான் அடிப்படை கல்வித் தகுதி. எனவே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, இந்த தேர்வுகள் நடந்தன. உதவியாளர் வேலை என்பது மிக முக்கியமான வேலை. ஆனால் இந்த வேலைக்கு கேட்கப்பட்ட கேள்விகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. பொது தமிழ் பகுதியில் உள்ள கேள்விகளில், பல கேள்விகள் எல்லோ ராலும் பேசப்பட்டன. எடுத்துக்காட்டாக 1–ம் வகுப்பில்

கேட்கப்படும் கேள்விகள்போல பொருத்துக என்று தலைப்பிட்டு ஒரு பக்கம் காகம், குதிரை, சிங்கம், குயில் போடப்பட்டிருந்தது. அதை பொருத்தவேண்டிய வார்த்தை களாக அதன் பக்கத்திலேயே கூவும், கரையும், கனைக்கும், முழங்கும் என்று போடப்பட்டிருந்தது.

9–ம் வகுப்பு பாடப்புத்தகம் 3–ம் பருவம், பக்கம் 82–ல் உள்ள கீழ்க்காணும் தொடரில் உள்ள சரியான தேர்வை செய்க. யானையின் கண் சிறியது, யானையின் கண்கள் சிறியது, யானையின் கண்கள் சிறியன, யானையின் கண் சிறியன என்று கேட்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விக ளெல்லாம் சிறுகுழந்தைகள் பதில் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், பார்த்தவுடன் சரியான பதில்களை தேர்வு செய்யும் உடனடி பொது கண்ணோட்டம் இருக்கிறதா என்பதை முடிவு செய்யும். மேலும் ஒருசில கேள்விகள் எல்லோராலும் எழுத முடியாத நிலையில் கடினமாக இருந்தது. தமிழ் இலக்கியம் படித்தவர்களால் மட்டுமே அத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும். ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள வினாக்கள் சில இலக்கணப் பிழையுடன் இருந்தன. கணக்கு பகுதியில், கணக்கு பாடத்தை முக்கியமாக கொண்டு படித்தவர்களால் மட்டுமே பதில் அளிக்க முடியும். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் உள்ள முக்கிய பிரச்சினைகள் எதைப்பற்றியும் கேட்க வில்லை. இப்படி பொதுத்தேர்வில் கேள்விகளை கேட்கும் போது அந்த பணிக்கு பொருத்தமான கேள்விகள், அந்த பணியில் சேர்ந்தால் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளை கேட்டு தேர்வு செய்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் வேண்டுவதெல்லாம் தேர்வு தாள்களை திருத்துவதில், மதிப்பிடுவதில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது. எங்கள் திறமையின் அடிப்படையில்தான் தேர்வு நடக்க வேண்டுமே தவிர வேறு எந்தவித புகார் களுக்கும், சந்தேகத்துக்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் தேர்வு எழுதியவர்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024