Saturday, August 19, 2017

ஓய்வூதியர்களே... உடனே வாங்க!

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:42

கோவை:அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கருவூலம், சார் கருவூலம் அல்லது வங்கிகளில் நேரில் ஆஜராகி, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான, 'லைப் சர்ட்டிபிகேட்' சமர்ப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலைக்குள், ஓய்வூதியர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, பங்கேற்காதவர்களின் ஓய்வூதியம் உடனடியாக நிறுத்தப்படும் என அறிவுறுத்தியுள்ளார், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான, 2017-18ம்ஆண்டுக்கான நேர்காணல், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை நடந்தது.இதுவரை நேர்காணலுக்கு ஆஜராகாத, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்துக்கு வந்து, தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு வராதவர்களின் ஓய்வூதியம், ஆகஸ்டு முதல் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024