நீங்க கல்யாணம் ஆனவரா? பல மனைவிகள் இருக்கா? வில்லங்கமாக கேள்வி கேட்கும் கல்லூரி!
சோ.கார்த்திகேயன்
எந்த ஒரு விண்ணப்பப் படிவத்திலும், திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா போன்ற கேள்விகள் மட்டுமே கேட்கப்படுவது வழக்கம். ஆனால், பீகார் மருத்துவக் கல்லூரியில் வில்லங்கமாகக் கேட்கப்பட்ட கேள்விகள், பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி, தனது ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு, அவர்களிடம் நீங்கள் கல்யாணம் ஆகாதவரா (virgin), உங்களுக்குப் பல மனைவிகள் உண்டா? போன்ற வில்லங்கமான கேள்விகளைக் கேட்டிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த மருத்துவக் கல்லூரியில், புதிய ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு விண்ணப்பப் படிவத்தில் திருமணம்குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகள் மருத்துவமனை ஊழியர்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்தப் படிவத்தில், ஆண் ஊழியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அந்த விவரங்களை வழங்குமாறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில், பெண் ஊழியர்களுக்கு அவர்களது கன்னித்தன்மை பற்றிக் குறிப்பிடுமாறும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது மட்டுமன்றி ,பெண் ஊழியர்களாக இருந்தால், அவர்களுடைய கணவருக்கு ஏற்கெனவே மனைவி இருக்கிறதா, அவருடைய மனைவி உயிருடன் இருக்கிறாரா எனப் பல வில்லங்கமான கேள்விகள் கேட்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
No comments:
Post a Comment