Saturday, August 19, 2017

மனநலம் குன்றிய வாலிபரின் கனவை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர்! குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்


மனநலம் குன்றிய வாலிபரின் கனவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நிறைவேற்றினார். ஸ்டீவனின் கனவை நனவாக்க காவல்துறையினருக்கு அவரின் பெற்றோர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜீவ் தாமஸ். இவர் கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். அவரின் மகன் ஸ்டீவன்.
19 வயதான ஸ்டீவன் மனநலம் குன்றியவர். ஆனாலும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உடையவர். அவரின் கனவு ஒரு காவல்துறை அதிகாரியாகி மக்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்பதே. இதை நிறைவேற்ற உதவக்கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை அனுப்பினார் ஸ்டீவன்.
ஸ்டீவனின் கோரிக்கையைக் கனிவுடன் அணுகிய போலீஸ் கமிஷனர், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தி.நகர்
காவல் துணை ஆணைய‌ரை நியமித்தார். ஸ்டீவனின் பெற்றோரைத் தொடர்புகொண்டு தேவையான ஏற்பாட்டைச் செய்து நேற்று ஒருநாள் அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரானார் ஸ்டீவன். காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, வாக்கி டாக்கியில் பேசி, காவல்துறை வாகனத்தில் ரோந்து சென்று உதவி ஆய்வாளராக வலம் வந்தார். காவல்துறையினர் தனது கனவை நிறைவேற்றிய சந்தோஷத்தில் ஸ்டீவன் இருந்தார். மகனின் கனவை நிறைவேற்றிய காவல்துறையினருக்கு ஆனந்த நன்றியைக் கண்ணீருடன் தெரிவித்தனர்.

மேலும், ஸ்டீவனின் கனவை நனவாக்க உதவிய மாநகர காவல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணைய‌ர் மற்றும் அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு ஸ்டீவனின் பெற்றோர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...