Thursday, August 10, 2017


திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் படப்பை ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம்

By DIN | Published on : 10th August 2017 03:33 AM



கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள படப்பை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்.


படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம் ஆறு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட படப்பை பகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டடம் ஏதும் இல்லாததால் பயன்படுத்த முடியாது என கைவிடப்பட்ட பழைய தச்சுக் கூடத்தில் தாற்காலிகமாக செயல்பட தொடங்கியது.

போதுமான இடவசதி இல்லாத இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் படப்பை, அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில், படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ரூ. 60 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இப்பணி முடிவடைந்து சுமார் 6 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போதும் பழைய கட்டிடத்திலேயே இடநெருக்கடியுடன் படப்பை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதனால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே புதிய கட்டடத்தை விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024