ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பரிதாபம் டாக்டர் இல்லாததால் சிறுமி, முதியவர் சாவு: சடலத்துக்கு சிகிச்சையளிப்பது போல் ஊழியர்கள் நடித்த கொடுமை
dinakaran
2017-08-14@ 00:10:08
ஆம்பூர்: சென்னை வேங்கைவாசல் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜ்குமார் (65). இவரது நண்பர் சென்னை தி.நகரை சேர்ந்த சந்தானம் (73) ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ராஜ்குமார் ஓட்டி வந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் அருகே பகல் 12.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பியதில் ராஜ்குமார் ஓட்டி வந்த கார் மீது மோதியது. இதில் காரில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட பொதுமக்கள், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதியம் 1.10 மணிக்கு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், நீண்ட நேரமாகியும் டாக்டர் யாரும் சிகிச்சை அளிக்கவில்லை. விபத்து குறித்து ராஜ்குமார் உறவினர்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதன்காரணமாக, சந்தானத்திற்கு தெரிந்த சிலர் வந்தனர்.
அப்போது, இருவருக்கும் டாக்டர் யாரும் வந்து சிகிச்சை அளிக்கவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பணியில் இருந்தவர்களிடம் இதுபற்றி கேட்டனர். இரண்டரை மணி நேரமாக டாக்டர்கள் யாரும் வராததால் ராஜ்குமார் இறந்துவிட்டார். இதையறிந்த ஊழியர்கள், டாக்டர்களுக்கு ரகசியமாக போனில் தகவல் தெரிவித்தனர். போனில் டாக்டர் கொடுத்த தகவலின்படி, இறந்த ராஜ்குமாருக்கு இசிஜி கருவியை பொருத்தி இதய துடிப்பை பதிவு செய்வது போல் நடித்தனர். மேலும், இறந்தவரின் திறந்த கண்களை மூடி அவர் மயக்கத்தில் இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனிடையே, சந்தானத்தை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின்னரே ராஜ்குமார் இறந்ததாக உறவினர்களிடம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ராலகொத்தூரை சேர்ந்த ராஜேஷின் மகள் வைஷ்ணவி(13) மூச்சு திணறல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், டாக்டர்கள் இல்லாததால் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் நர்சுகள் திணறினர். சிகிச்சை கிடைக்காமல் சுமார் 2 மணி நேரமாக உயிருக்கு போராடிய அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டதோடு, மருத்துவமனை கேட்டை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது அவர், ‘ஆம்பூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுக்குள் பனிப்போர் நடந்து வருகிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிவருவதால் உரிய நேரத்தில் அவர்கள் பணியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அமரர் ஊர்தி இல்லாததால் பைக்கில் சென்ற சடலம் மேலும் சிறுமியின் சடலத்தை கொண்டு செல்ல அமரர் ஊர்தி இல்லாததால், சடலத்தை பைக்கில் வைத்து 8 கி.மீ.தூரம் உள்ள கிராமத்துக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லாமல் 2 பேர் இறந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment