Friday, October 5, 2018

காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் சோகம் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் சென்னையில் மர்ம மரணம்: மனைவியிடம் தீவிர விசாரணை


2018-10-05@ 00:20:33




சென்னை: திருமணமான ஒரு மாதத்தில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், மர்மமான முறையில் வீட்டில் இறந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் ஆதாம் கிராஸ்வார்ட் (40). இவர், சென்னையில் உள்ள தனியார் இசை பயிற்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் இசை பயிற்சிக்கு வந்த கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் 14வது தெருவை சேர்ந்த ரஷி (24) என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். மகளின் காதல் விவகாரம் குறித்து ெபற்றோருக்கு தெரியவந்தது. உடனே ரஷியின் பெற்றோர் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆதாம் கிராஸ்வார்டை வீட்டிற்கு அழைத்து விசாரித்தனர். அப்போது, இருவரும் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து ரஷியின் பெற்றோர் மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், ஆதாம் கிராஸ்வார்டை அவரது பெற்ேறாரை அழைத்து வந்து முறைப்படி பெண் கேட்க ரஷியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

அதன்படி ஆதாம் கிராஸ்வார்ட் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து தனது பெற்றோரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஆதாம் கிராஸ்வார்ட் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரியவந்தது. இதனால் ஆதாம் கிராஸ்வார்டுக்கு பெண்ணை திருமணம் ெசய்து கொடுக்க ரஷியின் பெற்றோர் மறுத்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து ஆதாம் கிராஸ்வார்ட் ஆஸ்திரேலியாவில் உள்ள முதல் மனைவி ெகலியை விவாகரத்து செய்தார். பிறகு கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் சென்னையில் தனது காதலி ரஷியை திருமணம் ெசய்துள்ளார். தொடர்ந்து, இருவரும் பனையூர் விஜிபி தெற்கு அவென்யூவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவரை திடீரென காணவில்லை என்று மனைவி ரஷி வீட்டில் உள்ள மற்ற அறையில் தேடியபோது அவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் ரஷி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதாம் கிராஸ்வார்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்ேபட்ைட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக அவரது மனைவி ரஷி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதாம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் கொலையா அல்லது தற்கொலை செய்தாரா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024