Monday, December 17, 2018

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நீண்ட இடைவெளிக்குப்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கலிலுல்லா.ச

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.



மத்திய அரசு 2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை என 5 மாவட்டங்களில் எய்ம்ஸ் அமைப்பதற்கான இடம் பார்க்கப்பட்டது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கைகாட்டிய இடங்களைப் பார்வையிட்ட மத்திய சுகாதாரத்துறை குழுவினர் அங்கிருக்கும் ஒவ்வொரு வசதிகளுக்கும் மதிப்பெண் அளித்தார்கள்.



இதையடுத்து மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் 1,500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த செப்டம்பர் மாதம் மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், `எய்ம்ஸ் மருத்துவமனை அமைய படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். இந்த நிலையில், தற்போது தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...