Thursday, December 20, 2018

பணிக்கு வராத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊதியம் கிடையாது: தமிழக அரசு

By DIN | Published on : 20th December 2018 02:25 AM |

பணிக்கு வராத கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) பணிக்கு வராததாகக் கருதி அவர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் அளிக்கப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கமானது கடந்த 10-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களில் ஒருபிரிவினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு ஊழியர்கள் செயல்படுவது பணியாளர் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது.

எனவே, முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல் விடுப்பு எடுத்துள்ள அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அது அங்கீகாரமற்றதாகக் கருதப்படும்.
மேலும், விடுப்பாகக் கருதப்பட்டு அன்றைய தினத்துக்கு ஊதியம் ஏதும் அளிக்கப்படாது. தமிழக அரசின் இந்த வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...