சென்னை பைபாஸில் தொடரும் சமூகவிரோதச் செயல்கள்
By ENS | Published on : 10th December 2018 06:47 PM
சென்னை பைபாஸ் சாலையில் சமூக விரோத மற்றும் குற்றச்செயல்கள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சாலையில் கடந்த 2016 ஜனவரி முதல் 2017 ஜூலை வரை 195 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன, 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் விபத்துப்பகுதிகள் எனக் கண்டறியப்பட்ட 15 இடங்களில் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இங்கு சமூக விரோத செயல்கள் தொடருவதால் அது இச்சாலை முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், இந்த 32 கி.மீ. சாலையில் குறிப்பாக போரூர் பகுதியில் நள்ளிரவில் அதிகளவில் குற்றச்செயல்களும், சமூக விரோத செயல்களும் நடைபெறுகின்றன. இது கடந்த 4 ஆண்டுகளாக தொடர்கிறது என்றனர்.
No comments:
Post a Comment