Wednesday, December 19, 2018


வாட்ஸ்அப்பில் வந்தாச்சு PiP மோட்...இனி வீடியோக்களை உள்ளேயே பார்க்கலாம்


மு.ராஜேஷ்


வாட்ஸ்அப்பில் புதிதாக 'PiP' (Picture in Picture)என்ற வசதி புதிதாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப்பில் செயலி மிகப்பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இதன் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் சேர்த்து வருகிறது.



இந்நிலையில் 'PiP' (Picture in Picture)என்ற வசதி புதிதாக தற்பொழுது அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய வெர்ஷனான 2.18.380. என்ற பதிப்பை அப்டேட் செய்வதன் மூலமாக இந்த வசதியைப் பெற முடியும். இதற்கு முன்பு வரை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்யப்படும் வீடியோ லிங்க்களை க்ளிக் செய்தால் அதை அதற்குரிய ஆப்பில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் 'PiP' வசதியின் மூலமாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் வீடியோக்களை வாட்ஸ்அப்பின் உள்ளேயே பார்த்துக் கொள்ளலாம். 'PiP' வசதி கடந்த ஜனவரி மாதம் ஐஒஸ் இயங்குதளத்திற்கான வாட்ஸ்அப் செயலிக்கு கொடுக்கப்பட்டது. ஆண்ட்ராய்டில் இந்த வசதி ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதத்தில் பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது, தற்போது அனைவருக்கும் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024