Thursday, June 20, 2019


மானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகள் திருட்டு

 ஜூன் 20, 2019 01:16




மானாமதுரை, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் பெருமாள் கோயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருடு போனது.மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் பழமையான கரியமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. அர்ச்சகர் சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பூஜை செய்ய வந்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உற்ஸவர் கரியமாணிக்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளில் இருந்த தங்கசங்கிலியும் திருடப்பட்டிருந்தது. எஸ்.பி., ஜெயச்சந்திரன் பார்வையிட்டார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats

SC relief to Hamdard Institute of Medical Sciences and Research, admissions allowed for 150 MBBS, 49 PG seats 03.06.2026 Written By : Barsha...