20 ரூபாய் கட்டணத்தில் 'டூப்ளிகேட்' ரேஷன் கார்டு
Added : ஜூன் 02, 2019 01:04
ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கு, மாற்று கார்டுகள், தலா, 20 ரூபாய் கட்டணத்தில், ஜூலை முதல் வழங்க, உணவுத்துறை முடிவு செய்துள்ளது.
ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கும், ஏற்கனவே உள்ள கார்டில், பிழை திருத்தங்கள் செய்தவர்களுக்கும், 'டூப்ளிகேட்' எனப்படும், மாற்று கார்டுகள், அரசு, 'இ - சேவை' மையங்களில் வழங்கப்பட்டன.ஒரு கார்டுக்கு, 30 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சேவை மைய ஊழியர்கள், அதிக கட்டணம் வசூலித்தனர். இதனால், அந்த மையங்களில், மாற்று கார்டு வழங்குவதை, 2018ல், உணவுத்துறை நிறுத்தியது. ரேஷன் கார்டை தொலைத்தவர்கள், மாற்று கார்டுகள் வழங்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாற்று கார்டுகளை அச்சிட்டு வழங்கக் கூடிய கருவிகள் வாங்குவது உள்ளிட்ட பணிகளை, உணவுத் துறை மேற்கொண்டு வருகிறது.இவை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஜூலை முதல், 20 ரூபாய் கட்டணத்தில், மாற்று ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment