'வார்தா' புயல்: காற்றில் பறந்த கூரைகள்; தங்க இடமின்றி தவித்த மக்கள்
சென்னை ராயப்பேட்டை முத்தையா தோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிசைகளின் மேற்கூரை மீது மரங்கள் விழுந்தன. மழைநீரும் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து முத்தையா தோட்டம் குடிசைப் பகுதியில் வசித்து வரும் சித்ரா கூறியதாவது: புயல் காற்றால் எங்கள் பகுதியில் உள்ள குடிசைகள் அனைத்தும் நேற்று சேதமடைந்துவிட்டன. கூரைகள் காற்றில் பறந்துவிட்டன. பல குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள், உடமைகள் அனைத்தும் மழையில் நனைந்துவிட்டன. இதனால், அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் நேற்று தஞ்சமடைந்தோம்.
அங்கும் மரம் விழுந்ததால் அருகில் உள்ள கருமகாரிய கூடத்தில் பலர் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு முழுவதும் படுக்க சரியான இடமின்றி, உணவில்லாமல் குழந்தைகளும், முதியவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகினர். ஆனால், இதுவரை அதிகாரிகள் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.
தேர்தல் நேரத்தில் ஓட்டுகேட்டு வரும் கட்சிக்காரர்கள், உதவி தேவைப்படும் காலத்தில் உதவவில்லை. இந்தப் பகுதிக்கு அருகிலேயே உள்ள குழந்தைகள் மையத்தையும் பூட்டிவைத்துவிட்டனர். இதனால், அங்கு சென்றும் தங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment