Tuesday, December 20, 2016

ஏர் ஏசியா வழங்கும் கோலாலம்பூர் டூர் பேக்கேஜ்: டோண்ட் மிஸ் இட்! By கார்த்திகா வாசுதேவன் | Published on : 15th December 2016 01:50 PM

malasiya_tour

வந்தாச்சு டிசம்பர், நமக்கே நமக்கான புத்தம் புது வருஷத்தைக் கலக்கலாக கொண்டாட, எல்லாருக்குமே ஏதாவதொரு திட்டம் இருக்கும் தானே?!

யோசிச்சுப் பாருங்க, இந்த வருடத்தின் கடைசி நாளுக்கு திருப்தியாக பை, பை சொல்லி வழியனுப்பி விட்டு; வரப்போகும் ஃபிரெஷ்ஷான புது வருஷத்தை மலேசியாவுக்குப் போய் கொண்டாடினால் எப்படி இருக்குமென்று?. சூப்பராக இருக்கும் தானே!

வாழ்க்கைன்னா அப்பப்போ ஒரு மாற்றம் இருக்கணும். அந்த மாற்றத்தை இந்த வருஷம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தொடங்கத் திட்டமிடலாமா?!

எதுக்கு கோலாலம்பூரை யோசிக்கணும்? புது வருடக் கொண்டாட்டத்துக்கு வேறு நாடே இல்லையான்னு கூடத் தோணலாம். நாடுகள் நிறைய இருக்கலாம். ஆனால் அங்கே சென்று விடுமுறையைக் கொண்டாடுவதற்கான பயணச் செலவுகளும் நிறையவே ஆகுமே! அதனால் தான் பல ஆண்டுகளாக இந்தியர்களின் விடுமுறைக் கொண்டாட்டத்துக்கான முதல் தேர்வாக மலேசியாவே இருந்து வருகிறது.



உலகெங்கும் இருந்து மலேசியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் என்றென்றும் ஒரு சொர்க்கபூமி. அங்கே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய எல்லா விசயங்களுமே நமக்கு கிடைக்கும். மலேசியர்கள் பல நாட்டுக் கலாச்சாரங்களில் ஊறித் திளைத்த பண்பட்ட மனிதர்கள், அவர்களின் விருந்தோம்பல் ஒரு முறை அங்கு சென்றவர்களை மீண்டும், மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் படியிருக்கும். விடுமுறையில் கொண்டாடித் திளைக்கத் தோதான சாகஸங்கள் நிறைந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள், பரவசப்படுத்தும் சுவையுடன் கூடிய அற்புதமான உணவுகள், இவை அனைத்துமே சிக்கனமான பயணச் செலவில் நமக்குக் கிடைத்தால் யார் தான் மலேசியாவை விரும்ப மாட்டார்கள்! அதுசரி... இப்போது உங்களுக்கும் மலேசியாவுக்குப் போகும் ஆசை வந்து விட்டதா? அடடா இன்னும் டிக்கட் புக் பண்ணவில்லையே என்று வருந்துகிறீர்களா?

கவலையை விடுங்கள்; உங்களுக்காகத் தான் ‘ஏர் ஏசியாக்காரர்கள்’ ராயல் சிட்டி ஹைதராபாத்திலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமானச் சேவை தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போதும் உங்களுக்கு விடுமுறைக் கொண்டாட்டத்துக்கென கோலாலம்பூரைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது குழப்பமிருக்கிறதா? அப்படியானால் இங்கே கீழே பட்டியலிடப் பட்டிருக்கும் கோலாலம்பூரின் அற்புதங்கள் உங்களுக்காகத் தான். படித்து விட்டு உடனே ‘ஏர் ஏசியாவில்’ கோலாலம்பூர் செல்ல டிக்கெட் புக் பண்ணி விட வேண்டியது தானே!.

அப்படி என்ன தான் இருக்கிறது கோலாலம்பூரில்? இதோ லிஸ்ட்;



1. பெட்ரோனாஸ் கோபுரம் பாருங்கள்...

கோலாலம்பூருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது சுற்றுலாப் பயணத்தின் முதலடியை இங்கிருந்து தான் எடுத்து வைக்க வேண்டும். அமெரிக்க டுவின் டவர்களுக்கு இணையாக மற்றுமொரு இரட்டைக் கோபுரம். இப்போதும் இதன் கட்டுமான அமைப்பு உலக அரங்கில் கட்டடவியலாளர்கள் பலராலும் வியந்து போற்றப் பட்டுக் கொண்டிருப்பது தான் இதன் சிறப்பு. இது மொத்தம் 88 மாடி கொண்டது, அதில் இரண்டு வகையான பார்வை தளங்கள் உள்ளன. ஒன்று 41வது மாடியிலும், இரண்டாவது 86வது தளத்திலும் உள்ளது. உள்ளே செல்வதற்கு டிக்கெட் விலை குறைவு தான். மலேசியாவின் எந்த நகரத்திலிருந்தும் இந்த இரட்டைக் கோபுரங்களைக் காணலாம் என்றாலும் கோலாலம்பூரின் மாநாட்டு மையப் பூங்காவிலிருந்து இதைக் கண்டு களிப்பது தான் சாலச் சிறந்தது. இது பகற்பொழுதில் ஒரு விதமான தோற்றம் தரும், ஆனால் இரவுப் பொழுதே இந்த இரட்டைக் கோபுரத்தைக் காணப் மிகப் பொருத்தமான நேரம்.

2. ஜலன் அலரில் சாப்பிடலாம்...

சென்னையின் கையேந்தி பவன்களுக்கு ஈடாக மலேசியாவில் ஜலன் அலர் என்றொரு இடம் இருக்கிறது. இங்கே கிடைக்காத உணவு வகைகளே கிடையாது. மணக்க, மணக்க, கார, சாரமாக, நாவுக்கு ருசியாக தினுசு, தினுசாக தெருவோர உணவுகளை வயிற்றுக்கும், பர்சுக்கும் பழுதில்லாமல் ஒரு கை பார்க்கலாம். இங்கு தயாராகும் உணவுகள் அனைத்தும் மலேசிய அரசின் ‘சுத்தம் மற்றும் சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு’ உட்பட்டே தயாராகின்றன என்பதால் மக்கள் விரும்பி உண்கிறார்கள். அதனால் இந்தத் தெருக்களில் கூட்டத்திற்கு குறைவில்லை. விதம் விதமான சட்னிகளுக்கு ரசிகர்கள் எனில் உங்களது கோலாலம்பூர் பயணத்தில் நீங்களும் அந்தக் கூட்டத்தில் ஒருவராகி விடுவீர்கள். அங்கு கிடைக்கும் உணவு வகைகள் அனைத்துமே கூட்ட நெரிசலானாலும் காத்திருந்தாவது உண்ணலாம் எனும்படியான அபாரமான சுவை கொண்டவை.

3. உலகின் உயரமான கோபுரத்திலிருக்கிறோம் எனும் உணர்வைத் தரும் மெனாரா கோபுரம்:

உலகின் மிக உயரமான கோபுரங்களில் ஒன்று. மெனாரா அல்லது கே.எல் கோபுரம் என அழைக்கப்படும் இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து நீங்கள் மலேசியா நாட்டை முழுவதுமாகக் கண்டு களிக்கலாம். இந்த கோபுரத்தின் கடைசித் தளத்தில் பில்ட் ஆடியோ வசதியுடன் பொருத்தப் பட்டிருக்கும் தொலைநோக்கியால் நீங்கள் மலேசியாவைக் காணும் போது மொத்த மலேசியாவுக்கும் கோபுர உச்சியிலிருந்தவாறே ‘விர்ச்சுவல் சுற்றுலா’ சென்று வந்த உனர்வைப் பெற முடியும். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய வகையிலான இத்தகைய தொழில் நுட்ப வசதிகள் மலேசியாவில் பல இடங்களிலும் நமக்குக் காணக் கிடைக்கின்றன. இந்தக் கோபுரத்தைப் பற்றிய இன்னொரு சிறப்பான விசயம் என்னவென்றால் ‘புனித ரமதான் மாதங்களில் இதன் உச்சியிலிருந்து பிறை பார்ப்பதை’ இஸ்லாமியர்கள் சிறப்பு மிக்கதாகக் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த மெனாரா கோபுர உச்சியிலிருந்து உலகைக் காண்பது ஏர் ஏசியா விமானத்தில் பறந்தவாறு இந்த உலகைக் காண்பதற்கு ஈடானது.



4. உலகின் மிகப்பெரிய பறவைகள் பூங்கா...

கோலாலம்பூர் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் சென்று வரக் கூடிய மற்றொரு இடம் இந்த கே எல் பறவைகள் பூங்கா! சுமார் 3000 க்கும் அதிகமான பறவை இனங்களை இங்கே காண முடிகிறது.உலகில் பறவை ரசிகர்களை மிக அதிகமாக ஈர்க்கக் கூடிய வகையில் திறந்த வெளி பறவைகள் பூங்காவாக இது வடிவமைக்கப் பட்டிருப்பதால் உங்களுக்கு மிக அருகே பறவைகள் சிறகு உரசிப் பறந்து செல்வதை நீங்கள் மனப்பூர்வமாக உணர்ந்து அதன் இனிமையை அனுபவிக்கலாம். உள்ளூர் பறவை இனங்கள் மட்டுமல்ல பல வெளி நாட்டு பறவை இனங்களும் இறக்குமதி செய்யப் பட்டு உலக பறவை ஆர்வலர்களைக் கவரும் விதத்தில் இந்தப் பூங்கா உருவாக்கப் பட்டுள்ளது.

5. மலேசியாவைப் பற்றி புதிதாகத் தெரிந்து கொள்ள உதவும் ‘மலேசிய தேசிய அருங்காட்சியகம்’...

மலேசியக் கலாச்சாரத்தையும், வரலாற்றையும், அதன் பண்பாட்டையும் பற்றி நீங்கள் புதிதாகவோ அல்லது அதிகமாகவோ தெரிந்து கொள்ள விரும்பினால் உங்களது சிறப்பான தேர்வாக இருக்கப் போவது அதன் தேசிய அருங்காட்சியகமே! லேக் பூங்காவின் அருகில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மிக்க இஸ்லாமியக் கலைகளின் நுட்பமான விவரங்கள் முதல் இன்றைய நவீன இஸ்லாமியக் கலைப் பொருட்கள் வரை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இது தவிர இங்கே ரயில் அருங்காட்சியகமும் கூட உண்டு. அங்கே இந்நகர் உருவானது முதல் இங்கே மிகச் சிறப்பான முறையில் கட்டமைக்கப் பட்ட ரயில்வே நிர்வாக அமைப்பையும் அதன் வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

6. ஷாப்பிங் பிரியர்களுக்கென்றே உருவான சூரியா கே எல் சி சி சிட்டி செண்டர் மால்கள்...

ஷாப்பிங் செய்வதில் அதீத ஆர்வமா உங்களுக்கு? அப்படியானால் நீங்கள் நிச்சயம் ‘சூரியா கே எல் சி சி மால்களைத்’ தவற விடவே வாய்ப்பில்லை. இந்த 6 அடுக்கு ஷாப்பிங் மாலில் நீங்கள் வாங்க முடியாத பொருள் என்று ஒன்று இல்லவே இல்லை. சொந்த அம்மா, அப்பாவைத் தவிர மற்ற எல்லாவற்றையுமே இங்கே விலைக்கு வாங்கலாம். அத்தனை பொருட்களையுமே டியூட்டி ஃபிரீ கட்டணச் சலுகையில் பெறலாம் என்பதால் இந்த மால்களில் எப்போதும் கூட்ட நெரிசலுக்குக் குறைவே இருப்பதில்லை. இங்கே நீங்கள் பொருட்கள் வாங்குகிறீர்களோ இல்லையோ, இந்தியாவுக்கு விமானம் ஏறும் முன் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த ஷாப்பிங் மாலும் ஒன்று. ஏனெனில் இங்கு குவிக்கப் பட்டுள்ள பொருட்களை நீங்கள் வேறெங்கும் இப்படி மொத்தமாகக் காண்பதென்பது அரிதே!



7.சைனா டவுனுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்...

மலேசியாவுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கிருக்கும் மக்கள் தொகையில் சீனர்களும் அதிகமிருப்பதை நாம் உணர முடியும். மலேசியத் தெருக்களில் சரிபாதி சீனர்கள் உலவுகிறார்கள். அங்கே குட்டி சைனாவுக்குள் நுழைந்ததைப் போன்ற உணர்வைத் தரும் இடத்தைத் தான் மலேசிய மக்கள் ‘மினி சைனா’ என்றழைக்கிறார்கள். இங்கே சென்றோமெனில் சைனாவுக்கே போய் விட்ட உணர்வு தான். சீனர்களின் பாரம்பரிய உணவு நிலையங்கள், சீனக் கோயில்கள், சைனா பஜார்கள் என அந்த இடம் முழுக்கவே ஒரே சீன மயம். கோலாலம்பூர் செல்பவர்கள் தவற விடாது காண வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

8. பட்ஜெட் ஷாப்பிங் செய்ய புகெட் பிண்டங் ஷாப்பிங்...

கே எல் மோனோ ரயில் நிலையத்திலிருந்து எளிதாகச் செல்லும் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த புகெட் ஷாப்பிங் மையம். நாம் வாங்க நினைக்கும் அத்தனை பொருட்களும் தெருவோரங்களில் குவித்து வைக்கப் பட்டு அவற்றை நாம் பேரம் பேசி வாங்க முடியும் என்பது எத்தனை அருமையான விசயம். பலருக்கு பேரம் பேசி ஷாப்பிங் முடித்தால் தான் பொருள் வாங்கிய திருப்தியே கிடைக்கும். அப்படியானவர்கள் நிச்சயம் இந்த ஷாப்பிங் மையத்தை தங்களது மலேசிய சுற்றுலாவில் தவற விட்டு விடவே கூடாது. குறைந்த பட்சம் ஏர் ஏசியா சுற்றுலாப் பயணிகளின் பேக்கேஜ் அலவன்ஸுகளுக்காக அளிக்கும் முன்னுரிமைகளுக்காகவாவது நீங்கள் நிச்சயம் இங்கு ஏதாவது ஷாப்பிங் செய்வீர்கள்!

9. வண்ண மயமான ‘கே எல் பட்டர் ஃபிளை பூங்கா’...

தங்களது கோலாலம்பூர் பயணத்தில் இதுவரை யாருமே தவற விடாத மற்றோர் இடம். 120 வகையான பட்டர் ஃபிளை இனங்களுடன், வண்ண, வண்ணப் பூக்களும், பசுந்தளிர் செடி கொடிகளுமாக பார்க்கவே அந்த இடம் ஒரு மினி காட்டுக்குள் நுழைந்தாற் போன்ற உணர்வைத் தரக்கூடியது. அங்கிருக்கும் பட்டர் ஃபிளை வல்லுனர்கள் அவ்விடத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு பட்டர் ஃபிளை லைஃப் சைக்கிள், அவற்றின் இனப்பெருக்க முறை, உணவு சேகரிப்பு உள்ளிட்ட விவரங்களை எல்லாம் தெளிவாக விவரிக்கிறார்கள். மக்களுக்கு இந்த அபூர்வ உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி போதிக்க நினைக்கும் அவர்களது முயற்சி பாராட்டப் பட வேண்டிய ஒன்று.





10.கோலாலம்பூர் பத்து மலை குகைக் கோயில்...

கோலாலம்பூரை அடுத்து மிகக் குறுகிய தூரம் பயணித்தால் மலை உச்சியில் உள்ள பத்துமலை முருகன் கோயிலை அடையலாம். இது இந்துக்களின் குறிப்பாக மலேசியத் தமிழர்களின் புனிதத் தலமாகக் கொண்டாடப் படுகிறது. இங்கு எங்கு நோக்கினாலும் இந்து பக்தர்கள் கூட்டத்தையும், குட்டி, குட்டியாக இந்துக் கோயில்கலையும் காணலாம். பண்டிகைக் காலங்களில் மலேசியத் தமிழர்களில் பெரும்பான்மையோரை இங்கே தரிசிக்கலாம். மலை மேல் ஏற வெவ்வேறு இடங்களில் இருந்து 150 வழிகள் இருக்கின்றன. வழியெங்கும் குரங்குகளின் வழித் துணையுடன் பத்து மலை குகை காண மலை மேல் ஏறும் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, பிறகெப்போதும் அது ஓர் இனிய அனுபவமாக மனதில் நிலைத்து விடும். அதைக் காட்டிலும் மலையேறி அலுப்புடன் இறங்கும் போது ஏர் ஏசியாவின் விருந்தோம்பல் உங்களை ஒவ்வொரு முறையும் பத்து மலை குகை காண ஏக்கம் கொள்ள வைத்து விடக் கூடும்.

11.அபூர்வ நீர் வாழ் உயிரிகளின் கண்காட்சியான கே எல் சி சி அக்குவேரியம்...

கோலாலம்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் மையத்தில் அமைந்துள்ள இதை தனித்த மீன் அருங்காட்சியகம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது. 5000 விதமான நீர் வாழ் உயிரினங்கள் இங்கே காட்சிப் படுத்தப் பட்டு பராமரிக்கப் படுகின்றன. இதன் பரப்பளவு சுமார் 60,000 சதுர அடிகள். இங்கு தான் தரைப் பகுதியில் இருந்து 100 அடி ஆழத்தில் அமைந்த 300 அடி நீள மீன் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு நீருக்கு அடியிலிருந்து கண்ணாடிக் குகைக்குள் இவற்றைக் கண்டு களிப்பது மிக அருமையான அனுவபமாயிருக்கும்.

12. மலேசிய அரச மாளிகையான இஸ்தானா நெஹாரா...

2011 ல் மலேசிய அரசருக்காக புது அரண்மனை கட்டப் படும் வரை அரச குடும்பத்தினரின் அரண்மனையாக இருந்தது இஸ்தானா நெஹாரா. புது அரண்மனைக்கு அரசர் இடம் பெயர்ந்ததும் இஸ்தானா அரசு ஹெரிடேஜ் அருங்காட்சியகமாகி விட்டது. இங்கே ஒவ்வொரு நாளும் காவலர்களின் பணி நேரம் முடிந்து அவர்கள் பணிமாற்றம் செய்யும் முறை ஒரு சடங்காக பார்வையாளர் முன்னிலையில் நடைபெறுகிறது. அது சுற்றுலாப் பயணிகளுக்கு காணக் கண் கொள்ளாக் காட்சி. அது மட்டுமல்ல மலேசியாவில் அரசு பண்டிகை நாட்களின் போதெல்லாம் இஸ்தானா நெஹாரா முழு விளக்கு அலங்காரத்தில் மின்னும் போது அதைப் பார்க்க தேவலோக மாளிகை போலிருக்கும். அரண்மனைக்குள்ளிருக்கும் சில தனிப்பட்ட அறைகளைப் பார்வையிடும் உரிமையைக் கூட சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கியுள்ளது மலேசிய அரசு.



13.கே எல் சி சி பூங்காவில் செலவிடத் தகுந்த மாலை நேரங்கள்...

கல்லெறியும் தூரத்தில் மெனாரா கோபுரம், மற்றும் தேசிய மாநாட்டுப் பூங்கா இருக்க கோலாலம்பூரில் மாலை நேரங்கள் அனைத்தையும் பிரியமான நண்பர்களுடனும், உறவினர்களுடனும் செலவிடத் தக்க இடம் எனில் அதற்கு உகந்த இடம் கே எல் சி சி பூங்கா தான். அமர்ந்து பேசவும், காலாற நடந்து கொண்டே இளைப்பாற மிகச் சிறந்த இடமிது.

14.கலை நயமிக்க தெருவோர சுவரோவியம் காண ஜாமெக் மசூதிக்குச் செல்லலாம்...

கோலாலம்பூரில் கிழாங் மற்றும் கோம்பெக் நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஜாமெக் மஸூதி அந்நாட்டிலுள்ள மிகப் பழமையான இடங்களில் ஒன்று. மூரிஷ் கட்டடக் கலைக்கு சான்றாக அங்குள்ள மசூதியக் கொண்டாடுகிறார்கள். மசூதியச் சுற்றியுள்ள சுவர்களில் வரையப் பட்டுள்ள சுவரோவியங்கள் மிகப் பழமையானவை என்பதோடு அழகானவையும் கூட. சுற்றுலாப் பயணிகள் தவற விடக் கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.

15.சலிப்படைய வாய்ப்பே தராத சன்வே பீச் காயல் தீம் பார்க்...

நீங்கள் குடும்பத்துடன் கோலாலம்பூர் சென்றிருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இந்த இடத்தைத் தவற விடவே கூடாது. சாகஸ நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பிடித்தமான கடற்கரை விளையாட்டுகள், நீர் விளையாட்டுகள், மிருகக் காட்சி சாலை, உணவகங்கள் என்று அந்த இடமே ஒட்டுமொத்த பொழுதுபோக்கு திடலாகக் காட்சியளிக்கும். குழந்தைகள் மிக விரும்பி ரசிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. உங்களது மொத்த கோலாலம்பூர் பயணத் திட்டத்தையும் நிறைவு செய்வதாக இந்த இடத்தை தேர்வு செய்து கொண்டால் முழுத் திருப்தியுடன் நீங்கள் உங்கள் சுற்றுலாவையும் முடித்துக் கொண்டு மன நிறைவுடன் உங்களது ஏர் ஏசியா கோலாலம்பூர் சுற்றுலாப் பயணத் திட்டத்தையும் நிறைவு செய்யலாம்.

ஏர் ஏசியா மனமுவந்த விருந்தோம்பலுடன் உங்களுக்கு அளிக்கும் அற்புதமான வாய்ப்புகளில் ஒன்று இந்த மலேசியச் சுற்றுப் பயணம். டிசம்பர் தொடங்கி நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன...உடனே உங்களுக்கான டிக்கெட்டுகளை புக் செய்து புத்தாண்டில் உங்கள் உன்னதமான மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் பெறுங்கள்.

பயணங்கள் சிறக்கட்டும்!

அன்புடன் ஏர் ஏசியா விமான சேவை!

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...