Tuesday, December 20, 2016

'தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்'

By கார்த்திகேயன் வெங்கட்ராமன்
goundamani
நகைச்சுவை நடிப்பில் தனித்தன்மை வேண்டும் என்கிறார் கவுண்டமணி. நகைச்சுவை வசனங்களில் தங்கவேல். குரலின் விஷேசத்தன்மை எம்.ஆர்.ராதா. கோணங்கி சேஷ்டையில் சந்திர பாபு. இவங்க இந்த மாதிரி தனித்தன்மையிலதான் பிரபலமானங்க. காமெடி கலந்த நல்ல கேரக்டரும், பண்ணனும் என்பது இவரது விருப்பம்.

நகைச்சுவை நடிகரான இவரையே சிரிக்க வைத்த அனுபவங்கள் உண்டு. அவரே கூறுகிறார்.

‘கல்லுக்குள் ஈரம்’ படப்பிடிப்பின் போது நான் குடிச்சிட்டு வீட்டுக்கு வரேன். என் மகளாக நடித்த அருணா நான் குடிச்சிட்டு வந்ததைக்க கண்டுபிடிச்சு , உடனே யார் துட்டு குடுத்தாங்கன்னு கேக்க, 'பாரதிராஜா' ன்னு சொன்னவன், அடப்பாவி எனக்கு குடிக்க காசு கொடுத்திருக்காரேன்னு அவரோடயே சன்டை போட கிளம்புறேன்.

அந்த சமயத்தில் அருணா கதவ சாத்திட்டு 'எங்கேயும் போகாத, இங்கேயே உக்காரு' ன்னு என்னை பாத்து கத்தனும். உணர்ச்சி வேகத்தில தன்னுடைய தாய்மொழியான தெலுங்கிலேயே 'எங்கட போவுன்னு..இக்கட கூசு' ன்னு கத்த எனக்கு ஒரே சிரிப்பு. ஒரு வழியா அந்த காட்சிய படமாக்கி முடிச்சதும் பாரதிராஜா உட்பட எங்க எல்லாருக்குமே ஒரே சிரிப்பு.

'பெண்ணின் வாழ்க்கை' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் நான் அருணாவை கற்பழிக்கிற சீன். அவரைக் கட்டிப்பிடித்தவுடன் உணர்ச்சி வேகத்தில் தமிழில் கத்த வேண்டியவர் தெலுங்கிலேயே வசனம் பேச ஆரம்பிக்க, எனக்கு மூட் அவுட் ஆகி விட்டது. டைரக்டர் விஜயனிடம் உடனே, 'சார், தமிழ் தெரிஞ்ச பொண்ணையே போடுங்க, கற்பழிக்கிறேன்' ன்னு சொல்ல செட்டிலேயே ஒரே சிரிப்புதான்.

தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக நிறைய பேர் படங்களை தயாரிக்கிறேன் என்று வந்திருப்பதும், நிறைய பேர் நான் நடிக்கிறேன் என்று வந்திருப்பதும் கவுண்டமணியால் வரவேற்க முடியாத விஷயங்கள்.

இந்த அபரிமிதமான வளர்ச்சி தேவையில்லை விஷயம் தெரிந்த அனுபவசாலிகள் உறுதியான திட்டமிட்ட குறிக்கோளுடன் செயல்பட்டால்தான் பட உலகம் முன்னேற முடியும் என்பது இவருடைய அபிப்பிராயம்.



(சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.83 இதழ்)

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...