Wednesday, June 14, 2017

சுகாதாரத்துறை நோட்டீஸ் : டாக்டர்கள் அலட்சியம்

பதிவு செய்த நாள்13ஜூன்2017 23:57

'நோட்டீஸ் அனுப்பியும், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்தத்தை மீறிய டாக்டர்கள், பணிக்கு திரும்பவில்லை' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர். தமிழகத்தில் உள்ள, 13 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவம் படிக்கும் அரசு சாராத டாக்டர்கள், படிப்பை முடித்ததும், இரண்டு ஆண்டுகள், கிராமப்புறங்கள் உள்ளிட்ட, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். ஆனால், அவ்வாறு பணியாற்றாமல், அரசுக்கு, 'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும், ஒப்பந்தத்தை மீறியதாக, 600க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு, சுகாதாரத் துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது. ஆனால், டாக்டர்கள் பணிக்கு திரும்ப மறுப்பதால், குழப்பம் நீடிக்கிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நோட்டீஸ் பெற்ற எட்டு பேர் மட்டுமே பணிக்கு திரும்பினர். மற்ற டாக்டர்கள், அபராதமும் செலுத்தவில்லை; பணிக்கும் திரும்பவில்லை. வருவாய் துறை அதிகாரிகளும், அபராத தொகையை வசூலிப்பதில் சுணக்கம் காட்டுகின்றனர். தற்போது உள்ள சட்டத்தால், அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, ஒப்பந்தத்தை மீறும் டாக்டர்கள் மீது கடுமையான சட்டம் இயற்றுவது குறித்து, ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

- நமது நிருபர் -


No comments:

Post a Comment

KGMU starts clinic for L GBTQ patients

 KGMU starts clinic for L GBTQ patients  TIMES OF INDIA LUCKNOW 27.12.2024 Lucknow : King George's Medical University (KGMU) launched a ...