Monday, June 19, 2017

விதி மீறும் ஆட்டோக்களால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் திணறல்: போக்குவரத்து நெருக்கடியால் விபத்து அச்சம்
பதிவு செய்த நாள்19ஜூன்
2017
00:10

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் விதியை மீறி டிரைவர்கள் ஆட்டோவை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்து தடை ஏற்படுத்துவதால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல சிரமம் அடைகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவதால், அரசு டவுன் பஸ் சர்வீஸ் போதுமானதாக இல்லை. இதனால் வாடகை ஆட்டோ, கார், வேனை தேடி வெளியூர் பயணிகள் செல்கின்றனர்.
உள்ளூர் பயணிக்கு இடமில்லை: வழக்கத்தை விட வெளியூர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க, ரயிலில் வரும் உள்ளூர் பயணிகளை ஆட்டோவில் ஏற்றுவதில்லை. காரணம், பக்தர்களை லாட்ஜில் இறக்கி விட்டதால், ஆட்டோ டிரைவருக்கு லாட்ஜ் உரிமையாளர்கள் கவனிக்கின்றனர். இருப்பினும் சில லாட்ஜில் ஆட்டோவுக்கு கமிஷன் இல்லை என துணிச்சலாக போர்டு வைத்துள்ளனர்.

மேலும் ராமேஸ்வரத்தில் பெர்மிட் இன்றி 300க்கு மேலான ஆட்டோக்கள் இயங்குகிறது. பெரும்பாலான ஆட்டோக்களில் நிர்ணயித்த நபர்களை ஏற்றாமல், 10 முதல் 12 நபர்களை ஏற்றி அசுர வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதவிர கடந்த சில ஆண்டுக்கு முன்பு புதுத்தெரு, சித்தி விநாயகர் கோயில், நகை கடை தெரு வழியாக ஆட்டோ, வாகனங்கள் செல்லும் வகையில் ஒருவழி சாலையாக போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.

தாறுமாறாக நிறுத்தம்: இதனை துவக்கத்தில் நடைமுறைபடுத்திய போக்குவரத்து போலீசார் காலபோக்கில் கண்டு கொள்ளாததால், சித்தி விநாயகர் கோயில் சாலையில் ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தி விடுகின்றனர். இவ்வழியாக கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி வேன்கள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர்.
எனவே விதியை மீறும், பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து, ஒருவழி சாலையை அமல்படுத்தி நகரில் போக்குவரத்தை சீரமைக்க, இங்கு கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்க மாவட்ட எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம் போக்குவரத்து போலீசார் கூறுகையில்:ராமேஸ்வரத்தில் போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையால், அதிகரிக்கும் வாகன நெரிசல் மற்றும் ஒருவழி சாலை அமல்படுத்த சிரமம் உள்ளது. மேலும் விதி மீறும் ஆட்டோ டிரைவர்கள், பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றனர்.

No comments:

Post a Comment

4,200 cases, ₹25cr refunds: Fee complaints jump at pvt univs Out Of 5 Years, 50% Of These Filed Last Year

4,200 cases, ₹25cr refunds: Fee complaints jump at pvt univs Out Of 5 Years, 50% Of These Filed Last Year  Manash.Gohain@timesofindia.com 05...