Monday, June 19, 2017

சென்னை புதுமண தம்பதி மீது உ.பி.,யில் துப்பாக்கி சூடு

பதிவு செய்த நாள்19ஜூன்
2017
00:35


சென்னை: உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், சென்னையைச் சேர்ந்த, புதுமண தம்பதி படுகாயத்துடன் உயிர் தப்பி உள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த விஸ்வநாதனின் மகன் ஆதித்யகுமார், 31. சென்னை ராமாபுரத்தில் உள்ள, பிரபல கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.

அதே நிறுவனத்தில், வேலை பார்க்கும், கர்நாடக மாநிலம், குல்பர்கா பகுதியைச் சேர்ந்த, விஜயலட்சுமியை, 28, காதலித்து, 2017, மே மாதம் மணந்தார். பின், சென்னை, ராமாபுரம் ராயலா நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஜூன், 3ல், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ள, அத்தை வீட்டுக்கு, மனைவியுடன் ஆதித்யகுமார் சென்றார். உடன், நண்பர் ஷ்யாம் தேஜாவையும் அழைத்துச் சென்றார். சென்னையில் இருந்து, விமானம் மூலமாக, டில்லி சென்ற இவர்கள், வாடகைக்கு எடுத்த இருசக்கர வாகனத்தில், ஹரித்துவார் சென்றனர். பின், நேற்று முன்தினம், புதுமண தம்பதி ஒரு டூ-வீலரிலும், மற்றொரு டூ-வீலரில், ஷ்யாம் தேஜாவும் டில்லி திரும்பி உள்ளனர். இவர்கள், உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், ஹரித்துவார் - டில்லி நெடுஞ்சாலையில் சென்ற போது, மின்னல் வேகத்தில் எதிரே வந்த மர்ம நபர்கள், புதுமண தம்பதியை துப்பாக்கியால் சுட்டனர். அப்போது, துப்பாக்கி தோட்டா ஆதித்யகுமார் அணிந்து இருந்த ஹெல்மெட்டின் பக்கவாட்டை துளைத்து, அவரது தாடையை கிழித்து, வாய் வழியாக வெளியே வந்துள்ளது.

இதனால், நிலைகுலைந்த அவர், மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் இருந்து, கீழே விழுந்துள்ளார். அதில், விஜயலட்சுமிக்கும், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

வரும், மீரட்டில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்குப்பின், இருவரும் நலமுடன் இருப்பதாக, ஷ்யாம் தேஜா கூறினார்.
சம்பவம் குறித்து, முசாபர் நகர் அருகே உள்ள, நயீ மண்டி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆள் மாறாட்டம் காரணமாக, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து இருக்கலாம் என, கூறப்படுகிறது. வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும, விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

4,200 cases, ₹25cr refunds: Fee complaints jump at pvt univs Out Of 5 Years, 50% Of These Filed Last Year

4,200 cases, ₹25cr refunds: Fee complaints jump at pvt univs Out Of 5 Years, 50% Of These Filed Last Year  Manash.Gohain@timesofindia.com 05...