Monday, June 19, 2017



அதிரடி!
67,000 அரசு ஊழியர்களின்  பணி ஆவணங்கள் சோதனை


புதுடில்லி: சிறப்பாக பணியாற்றாதவர்களை கண்டறியும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் சேவை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை, அரசு துவக்கி உள்ளது.





மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு அமைந்தது முதல், அரசு ஊழியர் களின் சேவைத் திறனை அதிகரிப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு அலுவலகங்களுக்கு குறித்த நேரத்தில் ஊழியர்கள் வந்து பணியாற்ற வேண்டும்; தங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அரசு தீவிரம்

இந்நிலையில், நாடு முழுவதும், மத்திய அரசு பணியில் உள்ள, 67 ஆயிரம் பேரின் சேவை தொடர்பான ஆவணக் குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுப்பதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம்.

இது குறித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மூத்த அதிகாரி ஒருவர், நிருபர்களி டம் கூறியதாவது:மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களில், சேவையில் மெத்தனம் காட்டுபவர் களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடும் நடவடிக்கை

குறித்த நேரத்துக்கு அலுவலகத்துக்கு வராமை, தங்கள் பணிகளை குறித்த நேரத்தில்முடிக்காமல் காலந்தாழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கீனங் கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி வரும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

நேர்மைக்கு ஊக்கம்!

மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர் கள் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும் என, அரசு விரும்புகிறது. ஊழியர்கள் ஊழல் செய் வதை மத்திய அரசு,துளிகூட பொறுத்து கொள்ளாது. அதேசமயம், நேர்மையான அதிகாரிகள், சுதந்திரமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு, அரசு முன்னுரிமை அளிக்கிறது.

இதனால், அரசு ஊழியர்களின் பணித்திறன், அவ்வப் போது கடுமையான ஆய்வு களுக்கு உட்படுத்தப் படுகிறது. நேர்மையான ஊழியர்கள் ஊக்குவிக்கப் பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஆட்சியில், பணியிட மாற்றக் கொள்கை, சுற்றுலா செல்வ தற்கான சலுகைகள் உள்ளிட்ட

விஷயங்களில், விதிகள் கணிசமாக தளர்த்தப் பட்டுள்ளன.
அதேசமயம், ஊழியர்களின் பணித் திறனை ஆய்வு செய்து அறிந்து கொள்வதற் கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பதவி உயர்வுக்கான, ஊழியர் களின் தகுதியையும் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஜிதேந்திரா சிங் கூறினார்.

கட்டாய ஓய்வு!

கடந்த ஒரு ஆண்டில், பணியில் மெத்தனமாக இருந்த, திறன் குறைவான, மத்திய அரசு ஊழியர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 129 பேருக்கு, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள விதிப்படி, ஒரு ஊழியரின் பணித்திறன், அவரது சேவைக் காலத்தில், இரு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

பணியில் சேர்ந்து, 15 ஆண்டுக்கு பின் ஒரு முறையும், 25 ஆண்டுக்கு பின், மற்றொரு முறையும், ஊழியரின் சேவைத் திறன் சோதிக்கப்படுகிறது.நாடு முழுவதும், 48.85 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் இருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment

4,200 cases, ₹25cr refunds: Fee complaints jump at pvt univs Out Of 5 Years, 50% Of These Filed Last Year

4,200 cases, ₹25cr refunds: Fee complaints jump at pvt univs Out Of 5 Years, 50% Of These Filed Last Year  Manash.Gohain@timesofindia.com 05...