Monday, June 19, 2017

எய்ம்ஸ் அமைக்க ரூ.1,200 கோடி தேவை : டாக்டர் சங்க தலைவர் தகவல்

பதிவு செய்த நாள்19ஜூன்2017 01:13

திண்டுக்கல்: ''தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,200 கோடி தேவை,'' என அரசு மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் லட்சுமி நரசிம்மன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பு இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதனால் அரசு மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தேவையான அளவு இருந்தனர். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்படும். இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மாநில அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.ரூ.120 கோடியில் சேலத்தில் இருப்பதை போல் எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை தான் அமைக்க முடியும். டில்லியில் இருப்பது போல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,200 கோடி தேவைப்படும். அதோடு மருத்துவமனை செலவினங்களுக்கு மட்டும் ரூ.800 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சிகளை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

NEET eligibility percentile cut for PG intake

NEET eligibility percentile cut for PG intake 0.01.2025 Ahmedabad : The Medical Counseling Committee (MCC) has lowered the NEET PG 2024 qual...