Thursday, June 22, 2017

முதுநிலை மருத்துவ படிப்பு 2 வார அவகாசம் தேவை

பதிவு செய்த நாள்21ஜூன்
2017
23:10

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில், கூடுதலாக இரண்டு வாரம் அவகாசம் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் சேர, தொலைதுாரம் மற்றும் சிரமமான பகுதிகள், மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

தொலைதுாரம் மற்றும் சிரமமான பகுதிகள் என்ற வரையறைக்குள், கிராமப்புறங்களில் இயங்கும், 1,700க்கும் மேலான ஆரம்ப சுகாதார நிலையங்களை, தமிழக அரசு சேர்த்தது. அதனால், முதுநிலை மருத்துவ படிப்புகளில், பெரும்பாலான இடங்கள், அரசு டாக்டர்களுக்கு கிடைத்தது.
இதையடுத்து, தனியார் டாக்டர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' ஆரம்ப சுகாதார நிலையங்களை கூடுதலாக சேர்த்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
புதிய தகுதி பட்டியலை, மூன்று நாட்களில் வெளியிடவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்திலும், தமிழக அரசு சார்பில், அரசு பிளீடர், எம்.கே.சுப்ரமணியன் தாக்கல் செய்த மனுவில், 'அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்ய, மூன்று நாட்கள் போதுமானது அல்ல; எனவே, இந்த விஷயத்தில் முடிவு செய்ய, இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது. இம்மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Flight from Kuwait leaves behind half of luggage

Flight from Kuwait leaves behind half of luggage Jan 9, 2025, 03.55 AM IST  Chennai: Many Air India Express passengers from Kuwait were in f...