காசநோய் சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம்
பதிவு செய்த நாள்21ஜூன்
2017
22:39
புதுடில்லி: 'மத்திய அரசு திட்டத்தின் கீழ், காசநோய் சிகிச்சை பெறும் நோயாளிகள், ஆகஸ்ட், 31க்குள் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. டி.பி., எனப்படும் காசநோயை கட்டுப்படுத்தவும், அந்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில், காசநோய் சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. அதில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையுடன், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், 'காசநோய் சிகிச்சை பெறும் நோயாளிகள், இலவச சிகிச்சையை தொடர, ஆகஸ்ட், 31க்குள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: காசநோயாளிகள், அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில், ஆகஸ்ட், 31க்குள், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஆதார் பதிவு செய்யாதோர், ஆக., 31க்குள் பதிவு செய்து, அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.
நோயாளிகள் வசிக்கும் பகுதிகளில் ஆதார் பதிவு மையம் இல்லையென்றால், அது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால், தகுந்த ஏற்பாடு செய்யப்படும். அதுவரை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்து, சிகிச்சையை தொடரலாம். அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment