Saturday, June 24, 2017

சேலையூர் அருகே போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டு



போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் 21 பவுன் நகையை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஜூன் 24, 2017, 03:50 AM
தாம்பரம்,

சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம், கவுரிவாக்கம், சாந்தி நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் பட்டாபி சீனிவாசன். இவருடைய மனைவி விஜயலட்சுமி(வயது 65). இவர், நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு நடந்து சென்றார்.

அப்போது 2 மர்மநபர்கள் அவரிடம், “நாங்கள் போலீஸ்காரர்கள். இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது” என்று கூறி விஜயலட்சுமி அணிந்து இருந்த 21 பவுன் நகைகளை கழற்றி வாங்கினர். அதை ஒரு தாளில் மடித்து அவரிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டனர்.

21 பவுன் நகை அபேஸ்

விஜயலட்சுமி வீட்டுக்கு சென்று அந்த காகித பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் நகைகளுக்கு பதிலாக செங்கல் துண்டுகள், மண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் மர்மநபர்கள் போலீஸ் போல் நடித்து தன்னிடம் இருந்த 21 பவுன் நகையை தாளில் மடித்துக்கொடுப்பது போல் நடித்து நூதன முறையில் திருடிச்சென்று விட்டது தெரிந்தது.

இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

No comments:

Post a Comment

Govt. doctors do critical brain surgery to treat aneurysm

Govt. doctors do critical brain surgery to treat aneurysm The Hindu Bureau TIRUCHI 10.01.2025 A team from the Department of Neurosurgery, K....