Saturday, June 24, 2017

தேசிய செய்திகள்
திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு இளம்பெண் நூதன தண்டனை



டெல்லியில் திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு இளம்பெண் நூதன தண்டனை.

ஜூன் 24, 2017, 04:35 AM
புதுடெல்லி,

டெல்லி மங்கள்புரி பகுதியை சேர்ந்தவர் ரவி, வியாபாரி. 35 வயதான இவர் ஒரு இளம்பெண்ணை 4 வருடங்களாக காதலித்தார்.

ஆனால் அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பம் இல்லை.

இந்த நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து உறவினர் ஒருவர், ரவியை கடந்த புதன்கிழமை இரவு தொலைபேசியில் அழைத்து, உடனடியாக அங்கு வருமாறு கூறி உள்ளார். அவரும் சென்றார்.

அவரிடம் காதலி, திருமணம் பற்றிப்பேச அவரோ தனது வீட்டில் இந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

ஆத்திரம் அடைந்த அந்தப்பெண், அவரை குளியல் அறைக்குள் தள்ளி, அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி துண்டித்து விட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் அலறியவாறு வெளியே ஓடி வந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை சஞ்சய்காந்தி நினைவு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட சிகிச்சைக்கு பின்னர் அவரை ஜெய்ப்பூர் கோல்டன் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025