என்னை கருணை கொலை செய்யுங்க!' : ராஜிவ் கொலை வழக்கு கைதி மனு
பதிவு செய்த நாள்22ஜூன்
2017
02:24
புழல்: ராஜிவ் கொலை வழக்கில், 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள தண்டனை கைதி, தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என, தமிழக முதல்வருக்கு மனு கொடுத்துள்ளார்.
மறைந்த பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் மத்திய சிறையிலும், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலுார் மத்திய சிறையிலும், ரவிச்சந்திரன் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதில், சென்னை வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ராபர்ட் பயாஸ், 54. தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என,
தமிழக முதல்வருக்கு மனு கொடுத்துள்ளார். அவர், நேற்று பிற்பகல், தண்டனை சிறை அதிகாரிகள் மூலம், முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை மனு அளித்தார்.அதில், கூறப்பட்டுள்ளதாவது:
நான், 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறேன். தண்டனையை ரத்து செய்யக்கோரி, பிரதமருக்கு மனு கொடுத்தேன். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுத்தேன்; அதுவும், தள்ளுபடியானது. நான் அனுபவிக்கும் தண்டனை காலம், ஆயுள் தண்டனையை விட கூடுதலானது.ஜாமின் விடுப்பு எதுவும் கிடைக்காத நிலையில், என் குடும்பத்தினரை, நான் நிம்மதியாக சந்திக்க முடியவில்லை. விடுதலையாகி அவர்களை சந்திப்போம் என்ற, நம்பிக்கையையும் இழந்து விட்டேன். இனியும் உயிர் வாழ நான் விரும்பவில்லை. எனவே, என்னை கருணை கொலை செய்ய, சட்டரீதியான அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment