கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்
பதிவு செய்த நாள்24ஜூன்
2017
00:13
சென்னை: 'கல்லுாரி விடுதியில் மாணவர் மர்மமாக இறந்த வழக்கில், உடற்கூறு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலுார் மாவட்டம், சோளிங்கரை சேர்ந்த பரமசிவன் தாக்கல் செய்த மனு:மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி கல்லுாரியில், என் மகன் யுவராஜ், மூன்றாம் ஆண்டு, 'பார்மசி' படித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், சக மாணவரின் சகோதரர் இறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி கேட்டதற்கு, கல்லுாரி நிர்வாகம் மறுத்து விட்டது.அதனால், மாணவர்கள் அனைவரும், கல்லுாரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதை, என் மகன் மொபைல் போனில் படம் பிடித்தார் எனக்கூறி, மாணவர்களின் மொபைல் போன்களை நிர்வாகம் பறித்தது.

இந்நிலையில், ஜூன், 20ல், என் மகன் கல்லுாரி விடுதி கழிப்பறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வயிற்று வலி காரணமாக, தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்; இறப்பில் சந்தேகம் உள்ளது. வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். உடலை, மருத்துவர்கள் அடங்கிய குழு, உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வை, 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து, அதை வீடியோவில் பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்; வழக்கு விசாரணையை, 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 'அதுவரை, மாணவனின் உடலை பாதுகாத்து வைக்க வேண்டும்' என, மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment