Saturday, June 24, 2017

பல்கலை பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

பதிவு செய்த நாள்24ஜூன்
2017
00:59

கோவை;கோவை பாரதியார் பல்கலையின் கீழ் பணியாற்றும் 1,000 அலுவலகப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக நேற்று, ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் பங்கேற்றதால், அலுவலக பணிகளில் தொய்வு ஏற்பட்டது.தமிழ்நாடு அனைத்து பல்கலை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில், ஒரு நாள் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும், பாரதியார், பாரதிதாசன், பெரியார், சென்னை உள்ளிட்ட, 13 பல்கலைகளில் இப்போராட்டம் நடந்தது.கோவை பாரதியார் பல்கலையின் கீழ், 300 நிரந்தர மற்றும், 700 தொகுப்பூதிய பணியாளர்கள் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்று, பணிக்கு வரவில்லை. இதனால், அலுவலக மற்றும் ஆய்வக பணிகளை பேராசிரியர்களே மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது.போராட்டத்தில், 'பதவி உயர்வு வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்; தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்' உள்ளிட்ட, 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.பாரதியார் பல்கலை அலுவலர் சங்க தலைவர் ராம்குமார் கூறுகையில், ''நீண்டகாலமாக அலுவலர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. கடந்த, 21ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். நேற்று, அனைத்து பணியாளர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசு இதற்கும் செவிசாய்க்காவிடில், 28ம் தேதி பல்கலை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து பணியாளர்களும் ஈடுபடவுள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

Govt. doctors do critical brain surgery to treat aneurysm

Govt. doctors do critical brain surgery to treat aneurysm The Hindu Bureau TIRUCHI 10.01.2025 A team from the Department of Neurosurgery, K....