பேஸ்புக்'கில் புதிய வசதி : கேரள முதல்வர் பாராட்டு
பதிவு செய்த நாள்24ஜூன்
2017
01:18
திருவனந்தபுரம்: 'பேஸ்புக்' சமூகதளத்தில், ஒருவரது புகைப்படத்தை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி, கொண்டுவரப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு வசதிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு, முதல்வராக பதவியேற்ற, பினராயி விஜயன், சமூக வலைதளங்கள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு வருகிறார்.பேஸ்புக் சமூகதளத்தில், பயனாளி ஒருவரது புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வசதி இருந்தது. அவ்வாறு ஒருவரது படத்தை, மற்றவர்கள் பயன்படுத்த முடியாத புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிஉள்ளதாவது:சமூகதளங்களை பயன்படுத்துவோர், குறிப்பாக பெண்களின் நலனுக்காக, இந்த புதிய வசதியை, பேஸ்புக் நிறுவனம் நம் நாட்டில் துவக்கியுள்ளது; இது பாராட்டுக்குரிய விஷயம். மற்ற சமூகதளங்களும், இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என, எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

No comments:
Post a Comment