Saturday, June 24, 2017

தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
பதிவு செய்த நாள்   24ஜூன்
2017
05:55




சென்னை: தமிழகத்தில் இன்று(ஜூன் 24) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் சதம்:

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் நேற்று சதம் அடித்தது. அதிகபட்சமாக திருச்சி, திருத்தணியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் சென்னை, தூத்துக்குடி, மதுரை, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, வேலூர், பரங்கிப்பேட்டை, கடலூர், நாகபட்டினம் ஆகிய இடங்களிலும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

மழைக்கு வாய்ப்பு:

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; இரவில் சென்னையின் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025