Saturday, June 24, 2017

வெளிநாட்டு டாலர்கள் கடத்த முயன்றோர் கைது

பதிவு செய்த நாள்23ஜூன்
2017
23:47

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்கு கடத்த இருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு டாலர்கள் சிக்கின. சென்னையை சேர்ந்தவர், முகமது யூசுப், 35. இவர், நேற்று காலை, 5:20 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூருக்கு செல்ல இருந்த, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் செல்ல இருந்தார். அவரது உடமைகளை, சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர்கள் சிக்கின. இதையடுத்து, அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார், முகமது யூசுப்பை கைது செய்து விசாரிக்கின்றனர். இது, கணக்கில் காட்டப்படாத, 'ஹவாலா' பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025