'டைடல் பார்க்'கில் 'ஜாப் மேளா' என வைரலாகும் வதந்தி!புகார் தரப்போவதாக நிர்வாகம் தகவல்
பதிவு செய்த நாள்
ஜூன் 24,2017 00:54
கோவை:கோவையில் உள்ள, 'டைடல் பார்க்'கில், வரும் ஜூலை மாதம் 13ம் தேதி 'ஜாப் மேளா' நடைபெறுவதாக, சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று வைரலாகி வருகிறது.'இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்படும்' என, 'டைடல் பார்க்' வர்த்தக மேலாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கோவையில், ஹோப்காலேஜ் அருகில் விளாங்குறிச்சி சாலையில் அரசு சார்பிலான 'டைடல் பார்க்' வளாகமும், சரவணம்பட்டி பகுதியில் 5, சின்னவேடம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்., மற்றும் ரத்தினம் கல்லுாரி டைடல் பார்க் வளாகம் என மொத்தம் எட்டு வளாகங்கள் உள்ளன.கடந்த 2010ம் ஆண்டு முதல் இயங்கி வரும் விளாங்குறிச்சி சாலை டைடல் பார்க்கில் மட்டும், 70 சாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்குகின்றன. 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கே பணியாற்றுகின்றனர். சரவணம் பட்டி, கீரணத்தம் பகுதிகளில் இயங்கும் வளாகங்களில் உள்ள, 26 நிறுவனங்களில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த, 2015 வரை 35 நிறுவனங்கள் தான் அரசு சார்பில் டைடல் பார்க் வளாகத்தில் இயங்கின. தற்போது, உலகப்புகழ் பெற்ற முன்னணி நிறுவனங்களும் இங்கு இயங்கி வருகிறது.தமிழகத்தில் ஒரு லட்சம் கோடியாக மென்பொருள் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. மொத்த வர்த்தகத்தில் கோவை மட்டும், 15 முதல் 20 சதவீதம் அளவிற்கு பங்களிக்கிறது. எனவே, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களின் கனவு நகரமாகவும் கோவை உருமாறி வருகிறது.
இந்த நிலையில், நேற்று 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' போன்ற சமூக வலைதளங்களில், 'டைடல் பார்க்' கோயம்புத்துார் நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு நேர்காணல்' என்ற தலைப்பில், ஒரு குறுஞ்செய்தி உலவுகிறது. அதில், டிப்ளமோ, பி.இ., - பி.டெக்., முடித்த இளைஞர்களுக்கு, ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் வேலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
'காலியிடங்கள் நிறைய உள்ளன... நுழைவுக் கட்டணமின்றி அனுமதி இலவசம். வரும் ஜூலை 13ல் காலை, 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை நேர்காணல் நடக்கிறது' என்பது போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
நடைபெறும் இடம், மற்றும் விபரங்கள் அறிய, http://goo.g/UVY9r7 என்ற 'லிங்க்' தரப்பட்டுள்ளது. அதை, 'கிளிக்' செய்தவுடன், அந்த தளத்தில் விண்ணப்பத்தை நிரப்புதல், படிவம், சமர்ப்பிக்கும் முறை, பணியிடங்கள் குறித்து, அதற்கான தகுதிகள் குறித்தும், தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பிக்க முயன்று தங்களது தகவல்களை அந்த இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். முழுத் தகவல்களையும் பெற்றதும் இறுதி நிலையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. அப்போதும் நம் படித்த இளைஞர்கள் இது போலி என்பதை உணராமல் மீண்டும் மீண்டும் தங்களது சுயவிவரங்களை அதில் பதிந்து வருகின்றனர்.
இதுகுறித்து கோவை டைடல் பார்க்கின் வர்த்தக மேலாளர் சந்திரசேகர் கூறுகையில், ''இந்த விளம்பரம், 'டைடல் பார்க்' நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டதல்ல. யாரோ சில விஷமிகள் இந்த வேலையைச் செய்துள்ளனர். இங்கே, இயங்கும் நிறுவனங்கள் தனித்தனியே ஆட்கள் எடுத்துக் கொள்வார்கள். எங்களது நிர்வாகத்தின் கீழ் தேர்ந்தெடுக்க வேண்டுமானாலும் முறையாக அறிவிப்போம். இந்த மோசடி விளம்பரம் குறித்து, கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் தர முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
வேலையில்லாத இளைஞர்களின் துயரத்தை வைத்து, இப்படி மோசடியான விளம்பரங்களை தயாரித்து வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் கோபத்துடன் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment