நிறைவு பெற்றது பணி: விரைந்து செல்லலாம் இனி!நஞ்சப்பா ரோட்டில் புதிய பாலம் அடுத்த மாதம் திறப்பு.:ரவுண்டானா, மின் விளக்கு அமைக்கும் வேலை தீவிரம்!
பதிவு செய்த நாள்24ஜூன்
2017
01:19
காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில், 162 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளில், முதல் அடுக்கு பாலம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது; அதனால், நஞ்சப்பா ரோட்டிலுள்ள பாலம், அடுத்த மாத இறுதியில் திறக்கப்படவுள்ளது.
கோவை நகரின் மிக முக்கியப்பகுதியான காந்திபுரத்தில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க, நஞ்சப்பா ரோட்டில், பல அடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என்று, கடந்த 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டின்போது, அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்; அதற்கான அரசாணையும் அப்போது வெளியிடப்பட்டது; ஆனால், பணிகள் துவக்கப்படவில்லை.
ஒத்துழைப்பு இல்லை!
ஆட்சி மாற்றத்துக்குப்பின், இந்த பாலத்தின் வடிவம் மாற்றப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது; நான்கு ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2014ல் தான், பாலம் கட்டும் பணி துவங்கியது; ஐதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன்ஸ் லிட் நிறுவனம், இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. நஞ்சப்பா ரோடு சர்க்கஸ் மைதானத்திலிருந்து, சத்தி ரோடு, சங்கனுார் பாலம் வரை, 16.60 மீட்டர் அகலம், 1,752 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம் கட்டும் பணி, முதலில் துவங்கியது.கடந்த 2014, ஜூலை, 11 ம் தேதி, 550 பணியாளர்களோடு, இந்த பணியை துவக்கிய கட்டுமான நிறுவனம், 33 மாதங்களில், அதாவது, 2017 ஏப்ரல் 10 க்குள் நிறைவு செய்து தருவதாக ஒப்பந்தத்தில் உறுதியளித்திருந்தது. டிரான்ஸ்பார்மர்கள், உயர்மின் அழுத்த மின்கம்பிகளை மாற்றுவது, புதைமின்வடம் பதிக்கும் பணி, குடிநீர் குழாய் மாற்றுதல், போக்குவரத்து மாற்றம் போன்ற பணிகளில், பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு போதிய அளவிற்குக் கிடைக்கவில்லை.இவற்றை ஒருங்கிணைத்து பணிகளை விரைவு செய்ய வேண்டிய மாவட்ட நிர்வாகமும், இதைக் கண்டு கொள்ளாமலே இருந்தது; இதனால், கட்டுமானப் பணியில் பெரும் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக, நஞ்சப்பா ரோட்டில் கட்டப்பட்டுள்ள முதல் அடுக்கு பாலத்தின் கட்டுமானப் பணிகள், தற்போது முடிவடைந்துள்ளன. பாலத்தின் துவக்கப்பகுதியான 'பார்க் கேட்' அருகில், 'ரவுண்டானா' அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.இதற்காக, நஞ்சப்பா ரோடு சர்க்கஸ் மைதானத்திற்கு எதிரே, மாநகராட்சிக்கு சொந்தமான பகுதியில் அமைந்திருந்த, லேடீஸ் கிளப் கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது; புதிய மேம்பாலத்தில் இருந்து, இறங்கிச் செல்லும் வாகனங்கள், வ.உ.சி., பூங்கா வழியாக செல்லும் வகையில், இந்த 'ரவுண்டானா' அமைக்கப்படவுள்ளது.
முதல் அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி முடிவடைந்து விட்டதால், மின் விளக்கு அமைக்கும் பணி துவங்கியுள்ளது; ஆறு மீட்டர் துாரத்துக்கு ஒரு மின் விளக்கு வீதம், 252 எல்.இ.டி., மின் விளக்குகள் இந்த பாலத்தில் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 1,752 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளுக்கு, பச்சை நிறமும், மேற்பகுதியில் வெள்ளை நிற வர்ணமும் பூசப்பட்டு வருகிறது.மேம்பாலத்தின் இடது மற்றும் வலது ஓரத்தில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் சுவற்றின் மேற்பகுதியில், ஒரு அடி துாரத்துக்கு, ஸ்டீலால் ஆன இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேம்பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து, வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட பிரம்மாண்ட குழாய் வழியாக மழைநீர், குறிப்பிட்ட வடிகால் வழியாக வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பு!
மேம்பாலத்தை தாங்கி நிற்கும், 51 கான்கிரீட் துாண்களை சுற்றிலும் மூன்றடி உயர கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டு, அவற்றின் நடுவில் மண் போட்டு நிரப்பப்பட்டுள்ளது; அங்கு தள்ளுவண்டிக்கடைகள், நடைபாதை கடைகள், இரவு நேர டிபன் கடைகள் அமைக்காமல் இருக்கவும், வேறு விதமான ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்கவும், இரும்புக் கம்பிகள் (கிரில் அமைத்தல்) அமைக்கப்பட உள்ளது.
பாலத்தின் கட்டுமானப் பணிகள் பெருமளவில் முடிவடைந்து விட்டதால், 'மேம்பாலத்தை திறப்பு விழா செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கலாம்' என்று மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த மாதத்தில் நஞ்சப்பா ரோடு மேம்பாலத்தை மட்டும், முதல்வர் பழனிச்சாமி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாலம் திறக்கப்பட்டால், கணபதி, சரவணம்பட்டி, அன்னுார், சத்தி உள்ளிட்ட பகுதிகளுக்குச்செல்லும் வாகனங்கள், விரைந்து செல்லலாம்; இரண்டாவது அடுக்கு பாலம், நுாறடி ரோடு பாலம் கட்டுமானப் பணி முடிய, இன்னும் இரு ஆண்டுகளாகலாம்.
--நமது நிருபர்-

No comments:
Post a Comment