35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் குழந்தை பிறந்தது
By DIN | Published on : 18th June 2017 09:18 PM |
மும்பை: சவுதி அரேபியாவிலிருந்து இருந்து கொச்சி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த நிறைமாத கர்பிணிக்கு நடுவானில் அழகிய குழந்தை பிறந்தது. இதையடுத்து விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சவுதி அரேபியாவின், தம்மம் என்ற இடத்திலிருந்து கொச்சி வந்த ஜெட் ஏர்வேஸ் 9W 569 என்ற விமானம் மும்பை அருகே வந்தபோது நிறைமாத கர்பிணியான பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கொச்சி செல்ல சில மணி நேரம் ஆகும் என்பதால் பிரசவ சிகிச்சைக்காக அவசரமாக மும்பையில் விமானம் தரையிறக்கப்பட்டது.
35000 அடி உயரத்தில் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்து மருத்துவ பயிற்சி பெற்ற செவிலியர் ஒருவர் உதவியுடன், அந்த பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்தது.
பின்னர் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், தாய் மற்றும் குழந்தை இருவரும் ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், தனது விமானத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்நிறுவன விமானத்தில் பயணம் செய்வதற்கான சலுகை (பாஸ்) வழங்கியுள்ளது.
மும்பையில் தாயையும் குழந்தையும் இறக்கிவிட்ட பின்பு விமானம் மீண்டும் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது.

No comments:
Post a Comment