Monday, June 19, 2017

தமிழக முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவில்லை: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

By DIN  |   Published on : 19th June 2017 12:55 AM  |
ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எந்தவொரு தனிநபர்களின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12}ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், வாக்காளர்களைக் கவர பெருமளவில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறலில் வேட்பாளர்கள் ஈடுபட்டதாகக் கூறி அந்தத் தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்து கடந்த ஏப்ரல் 10}ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஆர்.கே. நகரில் இடைத் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனுப்பிய அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சகத்துக்கும் தேர்தல் ஆணையம் முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பிரசார காலத்தில் காணப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் எம்.பி. வைரக்கண்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் விவரம் கோரி விண்ணப்பித்தார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அளித்த பதில் தொடர்பாக, ஆணைய உயரதிகாரியிடம் கேட்டதற்கு, 'ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் முறைகேடு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு மட்டுமே மாநிலத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அவருக்கு ஆணையம் அனுப்பிய கடிதத்தில் தமிழக முதல்வரின் பெயரையோ அல்லது வேறு தனி நபர்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிடவில்லை' என்றார்.

No comments:

Post a Comment

NEET eligibility percentile cut for PG intake

NEET eligibility percentile cut for PG intake 0.01.2025 Ahmedabad : The Medical Counseling Committee (MCC) has lowered the NEET PG 2024 qual...