நடிகர் சாமிக்கண்ணு காலமானார்
தமிழ்த் திரையுலகில் 400 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் சாமிக்கண்ணு (95) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 3) காலமானார்.
அவருக்கு தயானந்தன் உள்பட 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மறைந்த சாமிக்கண்ணுவின் இறுதிச் சடங்குகள், சென்னை பள்ளிக்கரணை மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இயக்குநர்கள் மகேந்திரன், இராமநாராயணன், ராஜசேகர், ராஜ்கிரண் உள்பட பல இயக்குநர்களிடம் மறைந்த நடிகர் சாமிக்கண்ணு பணியாற்றியவர். தனது 8 வயதிலிருந்து நாடகக் கம்பெனிகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 1954 -ஆம் ஆண்டு புதுயுகம் திரைப்படத்தில் அறிமுகமான சாமிக்கண்ணு, அன்னக்கிளி, வண்டிச்சக்கரம், ஜானி, முள்ளும் மலரும், போக்கிரிராஜா, சகலகலாவல்லவன், என் ராசாவின் மனசிலே, மகாபிரபு உள்பட 400 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்புக்கு: 98845 99782
Dailyhunt
No comments:
Post a Comment