தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: தொடங்கிய 5 நிமிடத்தில் நிறைவு
By DIN | Published on : 18th June 2017 10:28 AM |
சென்னை: அக்டோபர் 16-ம் தேதி பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய ஐந்தே நிமிடத்தில் நிறைவு பெற்றது.
2017ம் ஆண்டிற்கான தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று (ஜூன் 18) காலை தொடங்கியது.
தொடங்கிய 5 நிமிடத்தில் ரயில் டிக்கெட்க்கள் அனைத்தும் விற்பனையானது. பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர்.
நாளை அக்டோபர் 17-ம் தேதிக்கான முன்பதிவு, நாளை மறுநாள் அக்டோபர் 18-ம் தேதிக்கான முன்பதிவு துவங்க உள்ளது.
No comments:
Post a Comment