விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை - புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது
பதிவு: ஜூலை 06, 2017 11:59
இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
புது டெல்லி:

இந்தியாவில் விமான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 1982-விண்டேஜ் சட்டம் மிகவும் வலுவிழந்து இருப்பதால் அதற்கு பதிலாக இந்த சட்டம் இயற்றபட்டது. அச்சட்டத்தில் புதிய திருத்தங்கள் 2016 ஆண்டே கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்கான விதிமுறைகளை அரசு வகுக்காததால் இது வரை அச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்நிலையில் இச்சட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விமான கடத்தலின் போது, விமானத்தில் வைத்து அல்லது கீழே வைத்து யாருக்காவது உயிரிழப்பு ஏற்பட்டால் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும்.
மேலும் விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கியதற்கு பின் 24 மணி நேரத்திற்குள் ஏதேனும் தாக்குதல் நடந்தாலும் அதுவும் இச்சட்டத்தின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி ஆயுதங்களை வைத்து அமைதி தாக்குதலில் ஈடுபடுபவர்களும் இதில் அடங்குவர்.
இந்த புதிய சட்டத்தின் மூலம் விமான கடத்தல் குற்றத்தை குறைக்கலாம். இச்சட்டமானது ஐ.நா சபையின் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள பெய்ஜிங் நெறிமுறைக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment