Wednesday, August 16, 2017

மாவட்ட செய்திகள்

விடுமுறை முடிந்து திரும்பி செல்வதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்



விடுமுறை முடிந்து திரும்பி செல்வதால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
ஆகஸ்ட் 16, 2017, 04:15 AM
சேலம்,

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை(12-ந் தேதி) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை தினமாகும். அதாவது 14-ந் தேதி கிருஷ்ணஜெயந்தி, 15-ந் தேதி சுதந்திரதினம் விடுமுறை ஆகும். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பணி நிமித்தமாக குடும்பத்துடன் வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்திருந்தனர். நேற்றுடன் விடுமுறை முடிந்ததால், சேலம் வந்திருந்த அனைவரும் மீண்டும் பணிநிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஊர் செல்ல விரும்பும் பயணிகள் குடும்பத்துடன் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் இரவு 10 மணிவரை அலைகடலென திரண்டனர். இதனால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

கூட்டம் அதிகமாக இருப்பதை கண்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்கப்பட்டது. இதனால் பஸ்நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு பஸ் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரில் டோக்கன் வழங்கப்பட்டது. சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024