Saturday, August 19, 2017

முதுநிலை மருத்துவம் படித்தும்  பயனில்லை: பரிதவிக்கும் டாக்டர்கள்

ஆகஸ்ட் 18,2017,21:40 IST


இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், பாடத் திற்கான அங்கீகாரம் காலவதியானதால், படிப்பை முடித்த டாக்டர்கள், மருத்துவ கவுன்சி லில் பதிவு செய்து, பணிக்கு செல்ல முடியா மல், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.





மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ், சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இதில், 2011ல், 14 இடங்களுடன், எம்.டி., - எம்.எஸ்., என்ற, முதுநிலை மருத்துவ படிப்புகள் துவக்கப் பட் டன.இந்த படிப்புகளுக்கு, எம்.சி.ஐ.,என்ற, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி,2015ல்

முடிந் தது.போதிய கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தாதது, போதிய பேராசிரியர்கள் நியமிக்கா ததை காரணம் காட்டி, முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கு, அங்கீகாரம் தர, எம்.சி.ஐ., மறுத்து விட்டது. இதனால், 2015ல் படிப்புகளில் சேர்ந்து, முதுநிலை மருத்துவம் முடித்த டாக்டர்களால், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியவில்லை.

இதனால், எம்.பி.பி.எஸ்., படித்தவர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர்; அவர்களால், உயர் சிகிச்சை அளிக்க முடியவில்லை; படிப்புக்கேற்ற வேலைக் கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து, முதுநிலை படித்தடாக்டர்கள் கூறியதாவது:

இந்த கல்லுாரியில், முதுநிலை மருத்துவ படிப் பிற்கு உள்ள, 14 இடங்களில், ஐந்து இடங்களுக்கு, எம்.சி.ஐ., அங்கீகாரம் கொடுத்துள்ளது. பல்வேறு காரணங்களால், ஒன்பது இடங்களுக்கு அங்கீகாரம் தர மறுத்து விட்டது. இதனால், அந்த இடங்களில் சேர்ந்து படித்து, சான்றிதழ் பெற்றாலும், முறைப்படிபதிவு செய்ய முடியவில்லை; அதற்கான பலன்களை பெற முடியவில்லை.

எங்களுக்கு, உதவி கோரி, மருத்துவ கல்லுாரி முதல்வரை பல முறை சந்திக்க முயன்றும், அனுமதி மறுக்கப்படுகிறது. மத்திய தொழி லாளர் நல அமைச்சகம், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024